Published : 20 Sep 2019 10:55 AM
Last Updated : 20 Sep 2019 10:55 AM

உலக மல்யுத்தத்தில் அரை இறுதிக்கு முன்னேறியதால் பஜ்ரங், ரவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

நூர்-சுல்தான்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் அரை இறுதிக்கு முன்னேறியதால் இந்தியாவின் பஜ்ரங் புனியா, ரவி தகியா ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

கஜகஸ்தானின் நூர்-சுல் தான் நகரில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்று வரு கிறது. இதில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி யில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, கஜகஸ்தானின் தவுலத் நியாஸ் பெகோவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டம் 9-9 என்ற கணக்கில் சமநிலை யில் முடிவடைந்தது. ஆனால் இந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் பஜ்ரங் புனியாவை வட்டத்துக்கு வெளியே தள்ளி 4 புள்ளிகளை கொத்தாக அள்ளியிருந்தார் நியாஸ் பெகோவ். இதன் காரணமாக நியாஸ் பெகோவ் வெற்றியாள ராக அறிவிக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் முக் கியமான தருணங்களில் கள நடுவர் நியாஸ் பெகோவுக்கு சாதகமாக செயல்பட்டது போன்று தெரிந்தது. பஜ்ரங் புனியா வலுவாக நியாஸ்பெகோவை மடக்கி பிடித்திருந்த போது பலத்த மோதலுக்கிடையே பஜ்ரங் புனியாவை வட்டத்துக்கு வெளியே நியாஸ்பெகோவ் தள்ளினார்.இதனால் கண்ணிமைக்கும் நொடி யில் நியாஸ்பெகோவுக்கு 4 புள்ளிகளை அள்ளி வழங்கினார் நடுவர்.

இதை எதிர்த்து பஜ்ரங் புனியா தரப்பில் மேல்முறையீடு செய்யப் பட்டது. பஜ்ரங் புனியா கையாண்ட நுணுக்கங்களுக்கு குறைந்தது 2 புள்ளிகளாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மேல் முறை யீடு பலன் இல்லாமல் போக மேலும் ஒரு புள்ளியை இழக்க நேரிட்டது. மேல் முறையீடு முடிவடைந்த சில நொடிகள் கழித்த பின்னரும் நியாஸ்பெகோவை இளைப்பாற அனுமதித்தார் நடுவர். இதை பஜ்ரங் புனியா சுட்டிக் காட்டிய போதும் அதை நடுவர் கருத்தில் கொள்ளவும் இல்லை, நியாஸ்பெகோவை எச்சரிக்கை செய்யவும் இல்லை.

அரை இறுதியில் தோல்வி யடைந்த பஜ்ரங் புனியா வெண் கலப் பதக்கத்துக்கான ஆட்டத் தில் பங்கேற்க உள்ளார். மேலும் அரை இறுதியில் விளை யாடியதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடை பெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு பஜ்ரங் புனியா தகுதி பெற்றுள்ளார்.

57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ரவி தகியா 4-6 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான ரஷ்யாவின் ஸவுர் உகுவேவிடம் தோல்வியடைந்தார். எனினும் அரை இறுதியில் கால் பதித்ததன் மூலம் ரவி தகியா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றார். உகுவேவிடம் தோல்வி கண்ட ரவி தகியா வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாட உள்ளார்.

மகளிருக்கான 59 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் பூஜா தண்டா 3-5 என்ற கணக்கில் சீனாவின் ஜிங்குருவிடம் தோல்வியடைந்தார். 62 கிலோ எடைப் பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக் ஷி மாலிக் தனது முதல் சுற்றிலேயே 7-10 என்ற கணக்கில் நைஜீரியாவின் அமினாத் அடெனியிடம் தோல்வி யடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x