Last Updated : 24 Jul, 2015 06:45 PM

 

Published : 24 Jul 2015 06:45 PM
Last Updated : 24 Jul 2015 06:45 PM

பிராக்யன் ஓஜா, அமித் மிஸ்ராவிடம் 268 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா ஏ

சென்னையில் நடைபெறும் இந்தியா ஏ அணிக்கு எதிரான 4 நாள் கிரிக்கெட் போட்டியின் 3-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா ஏ அணி தன் முதல் இன்னிங்ஸில் 268 ரன்களுக்குச் சுருண்டது.

இதன் மூலம் இந்தியா ஏ அணி 33 ரன்கள் முன்னிலை பெற்று தனது 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. கரண் நாயர், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா ஏ அணி 154 ரன்கள் முன்னிலை பெற்றது.

நேற்று 185/4 என்று இருந்த ஆஸ்திரேலியா ஏ அணி ஒரு சமயத்தில் பிராக்யன் ஓஜாவிடம் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 75/4 என்று ஆனது ஆனால் அதன் பிறகு ஹேண்ட்ஸ்கோம்ப், ஸ்டோய்னிஸ் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 154 ரன்களைச் சேர்த்தனர்.

182 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்து சதம் எடுக்க வாய்ப்பு பெற்ற ஹேண்ட்ஸ்கோம்ப், அமித் மிஸ்ரா பந்தில் நமன் ஓஜா ஸ்டம்ப்டு செய்ய வெளியேறினார். உடனடியாக மேத்யூ வேட் 2 ரன்களில் அமித் மிஸ்ரா பந்தை முகுந்திடம் கேட்ச் கொடுத்தார். 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்த ஸ்டோய்னிஸ் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து ஓஜாவிடம் ஆட்டமிழந்தார். அபாட் ரன் அவுட் ஆக, சாந்து மற்றும் பெகெடே ஆகியோரை முறையே ஓஜா, மிஸ்ரா வீழ்த்த, 229/4 என்ற நிலையிலிருந்து 268 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா ஏ.

இந்திய அணித் தேர்வாளர்கள் ஹர்பஜனுக்கு பின்னடைந்த நிலையில் ஓஜா 31 ஓவர்களில் 3 மெய்டன்களுடன் 85 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அமித் மிஸ்ரா 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

33 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா ஏ அணியில் கே.எல்.ராகுல் நன்றாகத் தொடங்கி 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்து டி.எம். ஹெட் பந்தில் வெளியேறினார்.

அதன் பிறகு முகுந்த் (40), கேப்டன் புஜாரா (42) இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 71 ரன்களைச் சேர்த்தனர். முதலில் முகுந்த் பிறகு புஜாரா ஆகியோரை சாந்து வீழ்த்தினார். அவர் 11 ஓவர்களில் 5 மெய்டன்கள் வீசி 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நாளை ஆட்டத்தின் கடைசி நாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x