செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 09:40 am

Updated : : 12 Sep 2019 09:40 am

 

தென் ஆப்பிரிக்காவுடன் டெஸ்ட் தொடர்; இந்திய அணி இன்று அறிவிப்பு: ரோஹித் சர்மா இடம்பெற வாய்ப்பு

indian-team-for-south-africa-test

மும்பை

தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது. அணியில் ரோஹித் சர்மா இடம்பெறுவார் எனத் தெரிகிறது.

தென் ஆப்பிரிக்க அணி விரைவில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. 3 டெஸ்ட், 3 டி20 ஆட்டங்களில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடவுள்ளன.

செப்டம்பர் 15-ம் தேதி முதல் டி20 ஆட்டம் தர்மசாலாவிலும், இரண்டாவது டி20 ஆட்டம் 18-ம் தேதி மொஹாலியிலும் 3-வது டி20 ஆட்டம் 22-ம்தேதி, பெங்களூருவிலும் நடைபெறவுள்ளன.. இதைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்ட் அக்டோபர் 2 முதல் 6-ம் தேதி வரையும், புனேவில் இரண்டாவது டெஸ்ட் 10 முதல் 14 வரையும், ராஞ்சியில் மூன்றாவது டெஸ்ட் 19 முதல் 23 வரையும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்தியஅணியைத் தேர்வு செய்வதற்காக தேர்வுக் குழுத் தலைவர்எம்எஸ்கே பிரசாத் தலைமையில் கூட்டம் இன்று மும்பையில் நடைபெறவுள்ளது.

அணியில் ரோஹித் சர்மா மீண்டும் இடம்பெறுவார் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் ஃபார்மில் இல்லாத கே.எல். ராகுல் அணியிலிருந்து நீக்கப் படுவார் எனத் தெரிகிறது.

உத்தேச அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), மயங்க்அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், விருத்திமான் சஹா,பும்ரா, இஷாந்த் சர்மா, மொகமது ஷமி, உமேஷ் யாதவ், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பஞ்சால், நவ்தீப்சைனி, கோனா பரத், ஷுப்மான் கில். - பிடிஐ

தென் ஆப்பிரிக்காவுடன் டெஸ்ட் தொடர்இந்திய அணிரோஹித் சர்மா
Popular Articles

You May Like

More From This Category

More From this Author