Published : 16 Aug 2019 09:01 AM
Last Updated : 16 Aug 2019 09:01 AM

சச்சின், பாண்டிங் சாதனையை முறியடித்த கோலி

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான 3-வது போட்டியின் போது விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனது 43-வது சதத்தை பதிவு செய்தார்.

இதன்மூலம் கோலி கடந்த 10 ஆண்டுகளில் 20,502 ரன்கள் (டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகள்)குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் என்ற பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல் கர், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஆகியோரது சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங், சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளில் 18,962 ரன்கள் அடித்ததே இதுவரை அதிகபட்ச சாதனையாக இருந்தது.

சச்சின் டெண்டுல்கர் 15.962 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் விராட் கோலி, கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் தனது 21 -வது சதத்தை பூர்த்தி செய்தார்.

அதேபோல் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த பட்டியலில் சச்சினைச் சமன் செய்துள்ளார் கோலி. சச்சின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 70 இன்னிங்ஸில் 9 சதம் அடித்துள்ளார். கோலி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 35 இன்னிங்ஸில் 9 சதங்கள் அடித்துள்ளார்.

மேலும் சச்சின் தனது 43 -வது சதத்தை 415 -வது இன்னிங்ஸில்தான் எடுத்தார், கோலி தனது 230 -வது இன்னிங்ஸிலேயே அதை நிகழ்த்தியுள்ளார். அதாவது 185 இன்னிங்ஸ் முன்னதாகவே இந்த சாதனையை கோலி நிகழ்த்தினார்.

இந்திய அணி 2006-07-ம் ஆண்டு முதல் தற்போது வரை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 9 ஒருநாள் தொடரில் விளையாடியுள்ளது. இவை அனைத்திலும் இந்திய அணியே தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x