Published : 14 Aug 2019 08:10 am

Updated : 14 Aug 2019 08:37 am

 

Published : 14 Aug 2019 08:10 AM
Last Updated : 14 Aug 2019 08:37 AM

2-வது டெஸ்ட் இன்று தொடக்கம் பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?

the-uk-will-retaliate

லண்டன்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகலில் தொடங்குகிறது.


பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 251 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தி யிருந்தது. இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக் கிறது. 12 மாத தடைக்குப் பிறகு பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார்.

மீண்டும் ஒரு முறை ஸ்மித், இங்கிலாந்து பந்து வீச்சாளர் களுக்கு சவால் தரக்கூடும். இதேபோல் 2-வது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி சதம் விளாசிய மேத்யூ வேடிடம் இருந் தும் சிறப்பான ஆட்டம் வெளிப் படக்கூடும். பந்து வீச்சை பலப் படுத்தும் விதமாக மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட் ஆகி யோர் இறுதிக்கட்ட 12 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனால் பர்மிங்காம் டெஸ்டில் பங்கேற்ற ஜேம்ஸ் பேட்டின்சன் நீக்கப்பட்டுள்ளார். மேலும் 12-வது வீரராக பீட்டர் சிடில் அல்லது டிரெவிஸ் ஹெட் வெளியே அமரவைக்கப்படக்கூடும். 18 வருடங்களுக்குப் பிறகு இங்கி லாந்து மண்ணில் ஆஷஸ் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலிய அணி அனைத்து துறையிலும் கடும் நெருக்கடி கொடுக்க முழு வீச்சில் தயாராகி உள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்து அதன் பின்னர் தொடரை கைப் பற்றிய நிகழ்வு 2 முறை மட் டுமே அரங்கேறியுள்ளது. 1981 மற் றும் 2005-ம் ஆண்டு தொடர்களில் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட்டில் தோல்வியை சந் தித்த போதிலும் அதன் பின்னர் மீண்டெழுந்து கோப்பையை வென்றது.

இம்முறை பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் வெறும் 4 ஓவர்களை மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறியது ஒட்டுமொத்த அணி யின் செயல்திறனையும் முடக்கி போட்டது. அவரது இடத்தை இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டி யில் அறிமுக வீரரான ஜோப்ரா ஆர்ச்சர் நிரப்பக்கூடும் என கருதப்படுகிறது.

மொயின் அலிக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜேக் லீச் மீதும் சற்று எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த மாதம் அயர் லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜேக் லீச் 92 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருந்தார். ஆஸ்தி ரேலிய அணியின் நட்சத்திர வீர ரான ஸ்டீவ் ஸ்மித், இடது கை சுழலுக்கு எதிராக குறைந்த சராசரியையே (34.90) கொண்டுள் ளார். இதனால் ஜேக் லீச்சின் சுழலால் ஸ்மித்துக்கு நெருக்கடி கொடுக்க இங்கிலாந்து அணி முயற்சிக்கக்கூடும்.

அணிகள் விவரம்

ஆஸ்திரேலியா: டிம் பெயின் (கேப்டன்), டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராஃப்ட், உஸ் மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், டிரெ விஸ் ஹெட், மேத்யூவேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில், நேதன் லயன், ஜோஸ் ஹசல்வுட்.

இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப் டன்), ரோரி பர்ன்ஸ், ஜோ டென்லி, ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், ஜேக் லீச், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சேம் கரண், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராடு.

நேரம் : பிற்பகல் 3

இடம்: லண்டன்

நேரலை: சோனி சிக்ஸ்

2-வது டெஸ்ட்இங்கிலாந்துஆஸ்திரேலியாஆஷஸ் டெஸ்ட்

You May Like

More From This Category

More From this Author