Published : 13 Aug 2019 15:23 pm

Updated : 13 Aug 2019 15:23 pm

 

Published : 13 Aug 2019 03:23 PM
Last Updated : 13 Aug 2019 03:23 PM

ரன்கள் வேண்டும் ஷிகர் தவண்: தொடர் சொதப்பலுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

shikhar-dhawan-place-in-question-last-odi-question-of-selection
கீமோ பால் பந்தில் பவுல்டு ஆகும் ஷிகர் தவண். | ஏ.பி.

உலகக்கோப்பையிலிருந்து காயம் காரணமாக வெளியேறிய ஷிகர் தவண், நேரடியாக அணியில் இடம்பெற்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, தோனி போன்ற பெரிய தலைகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை உண்டு, ஆனால் ஷிகர் தவண் காயத்திலிருந்து நேராக இந்திய அணிக்குள் நுழைவது எப்படி என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

நடப்பு மே.இ.தீவுகள் தொடரில் ஷிகர் தவண் டி20 தொடரில் 1,23, 3 என்ற ஸ்கோரையும் 2வது ஒருநாள் போட்டியில் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து படு மோசமாக ஆடி வருவதால் அணியில் அவரது இருப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நாளை (புதன் கிழமை) 3வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது, இதில் ஷிகர் தவண் ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 26 ஜனவரி 19ம் தேதி நியூஸிலாந்தில் ஷிகர் தவண் 66 ரன்களை எடுத்த பிறகு அவரது ஸ்கோர் 28, 13, 6, 0, 21, 1 என்று சொதப்பினார், பிறகு மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 143 ரன்களை எடுத்தார். பிறகு 12, பிறகு 8 அதன் பிறகு உலகக்கோப்பையில் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பாணி பிட்சில் 117 ரன்களை எடுத்தார், அதோடு உலகக்கோப்பையிலிருந்து காயம் காரணமாக விலகினார். மீண்டும் அவரது ஆட்டம் எந்த நிலையில் உள்ளது என்ற சோதனைகள் வைக்கப்படாமலேயே மே.இ.தீவுகள் தொடருக்கு நேரடியாக ஆட்டமேட்டிக் செலக்‌ஷன் செய்யப்பட்டது. இங்கு வந்து 1,23, 3,2 என்று சொதப்பியுள்ளார். பொதுவாக சீரான முறையில் ரன்கள் எடுத்து வந்தவர்தான் ஷிகர் தவண், ஆனால் ஒரு பெரிய ஸ்கோர் பிறகு சொதப்பல்கள் இல்லையெனில் சொதப்பல்கள் பிறகு ஒரு பெரிய ஸ்கோர் என்று அவரது சீரற்ற தன்மை 2018-ல் கொஞ்சமும் 2019-ல் அதிகமாகவும் ஆகியுள்ளது புள்ளி விவரங்களைப் பார்த்தால் புரியும்.

உள்ளே வரும் பந்துகளை சரிவர ஆட முடியாமல் வேகப்பந்து வீச்சாளர் காட்ரெலின் ‘சல்யூட்’டுக்கு இருமுறை இரையானார் ஷிகர் தவண்.

அதே போல் இன்னும் நின்று ஆடக்கூடிய பொறுமையற்ற ரிஷப் பந்த்தை 4ம் இடத்தில் இறக்குவதும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது, இந்த இடத்தில் முறையாக தடுப்பாட்டம், ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து அவ்வப்போது கள இடைவெளியைப் பயன்படுத்தி பவுண்டரிகள் அடிக்கும் திட்டமிடும் வீரரைத்தான் களமிறக்க வேண்டும், அந்த வகையில் ஷ்ரேயஸ் அய்யரை 4ம் நிலையில் ஒரு 10-12 போட்டிகளுக்குக் களமிறக்குவதுதான் உசிதம், இதைத்தான் சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் குறிப்பிட்டனர்.

நாளைய போட்டியில் வென்று தொடரை சமன் செய்து முடிக்க மே.இ.தீவுகள் தீவிரமாக உள்ளது, 2வது போட்டியில் கூட பெரும்பகுதி வெற்றிப்பாதையில்தான் சென்று கொண்டிருந்தனர், ஒரு ஓவர் திருப்பு முனை ஏற்படுத்த சரிவு கண்டனர். அதை சரி செய்து விட்டால் மீண்டும் இந்திய அணிக்கு ஒரு சவால் அளிப்பார்கள், விராட் கோலியை விரைவில் கழற்றி விட்டால் இந்திய அணியை மடித்து விடலாம் என்பது தற்போது உள்ளங்கை நெல்லிக்கனியாகியுள்ளது, ரோஹித் சர்மாவும் ஐயத்துக்குக்கிடமாகும் வகையில் ஆடி வருகிறார்.

வெற்றிக் கூட்டணியை எந்த அணியும் மாற்ற விரும்பாவிட்டாலும் மணிக்கு 150 கிமீ வீசும் நவ்தீப் சைனிக்கு களமிறக்கிப் பார்க்கலாம். முதலில் இந்தக் கேதார் ஜாதவ்வை அணியை விட்டு தூக்குவது நல்லது, அவருக்குப் பதிலாக மணீஷ் பாண்டேயை இறக்கி அணியின் மிடில் ஆர்டரை இன்னும் வலுப்படுத்தலாம். ராகுல், கோலி, ஷ்ரேயஸ் அய்யர், மணீஷ் பாண்டே என்று மிடில் ஆர்டர் அமைந்தால் நன்றாக இருக்கும்.

அதாவது ரோஹித், ராகுல், கோலி, அய்யர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஜடேஜா,ஷமி, புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் அல்லது சாஹல் என்று அணியை மாற்றிப்பார்க்கலாம்.

நாளை இரவு 7 மணிக்கு இந்த இறுதி ஒருநாள் போட்டி தொடங்குகிறது.


ஷிகர் தவண்இந்தியா-மே.இ.தீவுகள் கடைசி ஒருநாள்போர்ட் ஆஃப் ஸ்பெயின்கிரிக்கெட்விராட் கோலிமணீஷ் பாண்டேநவ்தீப் சைனிகுல்தீப் யாதவ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author