Published : 10 Aug 2019 09:18 AM
Last Updated : 10 Aug 2019 09:18 AM

இலங்கை அணியில் மீண்டும் சந்திமால்

கொழும்பு : கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வரும் 14-ம் தேதி காலே நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதில் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தினேஷ் சந்திமால், 6 மாதங்களுக்குப் பிறகு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். 29 வயதான சந்திமால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மோசமாக விளையாடியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் அவர், இடம் பெறவில்லை.

அணி விவரம்: திமுத் கருணா ரத்னே (கேப்டன்), லகிரு திரிமானே, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், குசால் மெண்டிஸ், குசால் பெரேரா, நிரோஷன் திக்வெலா, விஷ்வா பெர்ணாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா, அகிலா தனஞ்ஜெயா, சுரங்கா லக்மல், லகிரு குமரா, லசித் எம்புல்டேனியா, ஓஷடா பெர்ணாண்டோ, லக்சன் சந்தகன். - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x