Last Updated : 01 Jun, 2015 02:58 PM

 

Published : 01 Jun 2015 02:58 PM
Last Updated : 01 Jun 2015 02:58 PM

பிசிசிஐ ஆலோசனை குழுவில் சச்சின், சவுரவ் கங்குலி, லஷ்மண்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆலோசனைக் குழு, கிரிக்கெட்டில் எதிர்கால சவால் களை சந்திப்பதற்கு தேவையான பல்வேறு முன்னேற்ற நடவடிக்கை களை எடுப்பது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்துக்கும், தேசிய அணிக்கும் வழிகாட்டும்.

இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் மதிப்பு மிக்க உறுப்பினர்களாக சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோரை பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா நியமித்துள்ளார். அதை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனைக் குழு, கிரிக்கெட்டில் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்துக்கும், தேசிய அணிக்கும் ஆலோசனை வழங்கும்.

வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாட இந்திய அணியினர் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோரிடம் ஆலோசனை கேட்கப்படும். இதுதவிர சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடுமையான சவால்களை எதிர்கொள்வதற்கு இளம் வீரர்களை தயார்படுத்தும் வகையில் உள்ளூர் போட்டிகளை பலப்படுத்த வழிகாட்டுதல் பெறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறுகையில், “சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர் இந்திய கிரிக்கெட்டை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவர்கள் என்பதில் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன். இவர்களின் வழிகாட்டுதல் மூலம் இளம் தலைமுறை வீரர்கள் பயனடைவார்கள். நம்முடைய கிரிக்கெட்டில் தற்போதுள்ள அமைப்பு முறைகளை மேம்படுத்த நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது” என்றார்.

பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர் கூறுகையில், “கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் இடம்பெறுவது தொடர்பான எங்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகிய மூன்று பேருக்கும் பிசிசிஐ நிர்வாகிகள் அனைவருடைய சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய விலைமதிக்க முடியாத ஆலோசனைகள் இந்திய கிரிக்கெட்டை அனைத்து விதமான போட்டிகளிலும் உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் என நம்புகிறேன்” என்றார்.

42 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்களையும், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களையும் குவித்துள்ளார். 43 வயதான கங்குலி 113 டெஸ்ட் போட்டிகள், 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 7,212 மற்றும் 11,363 ரன்களைக் குவித்துள்ளார்.

40 வயதாகும் லட்சுமண் 134 டெஸ்ட், 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 8,781 மற்றும் 2,338 ரன்களைக் குவித்துள்ளார். முன்னாள் கேப்டனான கங்குலி, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அல்லது இயக்குநராக நியமிக்கப்படலாம் என பல்வேறு ஊகங்கள் எழுந் திருந்த நிலையில், இப்போது அவர் ஆலோசனைக் குழுவில் சேர்க்கப்பட்டதன் மூலம் அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

அதனால் ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநராக தொடரலாம் அல்லது வேறு ஒருவர் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரவேற்பு

பிசிசிஐ கிரிக்கெட் கமிட்டியில் சச்சின், கங்குலி, லட்சுமண் சேர்க்கப்பட்டதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது சரியான திசையில் காலடி எடுத்து வைக்கும் நடவடிக்கை என அவர்கள் பாராட்டியுள்ளனர்.

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எரபள்ளி பிரசன்னா கூறுகையில், “இது நல்ல திட்டம். சச்சின் உள்ளிட்ட 3 பேருக்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. இந்திய அணியில் திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை. சரியான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாவிட்டால் இந்திய அணி சர்வதேச போட்டிகளில் ஜொலிக்க முடியாது. இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடக்கூடிய திறமையான சுழற்பந்து வீச்சாளர்களை சச்சின் கூட்டணி கண்டறிய வேண்டும்” என்றார்.

1983-ல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பர் சயீத் கிர்மானி கூறுகையில், “சச்சின் உள்ளிட்ட 3 பேரும் ஆலோ சனைக் குழுவில் சேர்க்கப் பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது சரியான நகர்வாகும். பிசிசிஐ சிறந்த விளையாட்டு அமைப்பு என்பதில் சந்தேகமில்லை. மற்ற சங்கங்களைப் போன்றல்லாமல், கிரிக்கெட் வீரர்களின் ஓய்வுக்குப் பிறகும் பிசிசிஐ அவர்களை நன்றாக பார்த்துக் கொள்கிறது.

எனினும் சமீபத்தில் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தவரும், அவர்கள் சாதிக்கத் தூண்டுதலாக இருந்தவருமான மொஹிந்தர் அமர்நாத் போன்றவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு பங்களிப்பு செய்ய ஆர்வமாக உள்ளனர். ஆனால் அவர்களை பிசிசிஐ கண்டுகொள்ளாதது ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளார் கிர்மானி.

அனில் கும்ப்ளேவை உதாரண மாகக் குறிப்பிட்டு பேசிய கிர்மானி, “நான் கேப்டனாக இருந்தபோது கும்ப்ளே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் ஓய்வுக்குப் பிறகு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார். நான் கர்நாடக கிரிக்கெட் சங்கத் தின் இயக்குநராக 6 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் அதன் அருகில் இருந்த தேசிய கிரிக்கெட் அகாடமியில் எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக் காதது மிகுந்த வேதனையளித் தது. எனினும் எனது காலத்தில் விளையாடிய வீரர்களுக்கு பிசிசிஐ எதிர்காலத்தில் ஏதாவது வாய்ப்பளிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே கூறுகையில், “இது மிகநல்ல திட்டம். சச்சின், கங்குலி, லட்சுமண் மூவரும் ஒன்றாக இணைந்து விளையாடி யவர்கள். போதுமான அனுபவம் கொண்டவர்கள். இந்திய கிரிக் கெட்டில் நடக்கும் எல்லா விஷயங் களும் சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றன” என்றார்.

முன்னாள் சுழற்பந்து வீச் சாளர் வெங்கடபதி ராஜூ கூறுகை யில், “சச்சின் உள்ளிட்ட மூவரும் விலைமதிக்க முடியாதவர்கள். இவர்களால் இளம் வீரர்கள் நம்பிக்கை பெறுவார்கள். பிசிசிஐயின் இந்த முடிவு இந்திய கிரிக்கெட்டின் நலனுக்கு உதவும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x