Last Updated : 16 Jun, 2015 04:35 PM

 

Published : 16 Jun 2015 04:35 PM
Last Updated : 16 Jun 2015 04:35 PM

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்: அப்ரிடி

வரவிருக்கும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இங்கிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு சாத்தியம் இருப்பதாக பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளாக சொந்தமண்ணில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை இழந்ததில்லை.

இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் அப்ரிடி கூறும்போது, “உள்நாட்டில் விளையாடுவதால் இங்கிலாந்துக்கு சாதகங்கள் அதிகம். இங்கிலாந்தில் எப்படி வீச வேண்டும் என்பதை அந்த அணியின் பவுலர்கள் நன்கு அறிவார்கள்.

இங்கிலாந்தில் அவர்கள் சிறப்பாக வீசுவதை நாம் பார்த்து வருகிறோம், மற்ற நாடுகளில் அவர்கள் சோபிக்க முடிவதில்லை.

ஒருநாள் போட்டிகளில் அவர்கள் தடுமாறலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் சவாலாகவே திகழ்வார்கள். எந்த அணி வெல்லும் என்பதில் ஒரு அணியை என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும், இங்கிலாந்துக்கு அவர்கள் சொந்த மண் என்பதால் வாய்ப்புகள் அதிகம்.

எனக்கு பிடித்த பவுலர் என்றால் அது கிளென் மெக்ராதான். அவருக்கு எதிராக நான் கடினமாக உணர்ந்திருக்கிறேன். அவரது பந்துகளை கண்மூடித் தனமாக அடிக்க முடியாது, அடிப்பதற்கு வாய்ப்பே அளிக்காத ஒரு பவுலர் அவர். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய பந்தில் அவரைப்போன்று வீசும் பவுலரை நான் கண்டதில்லை” என்றார்.

அதே போல் தான் பந்து வீச்சை எதிர்கொண்ட சிறந்த பேட்ஸ்மென் என்று மைக்கேல் கிளார்க்கை குறிப்பிட்டார் அப்ரிடி. "ஸ்பின்னுக்கு எதிராக அவரது கால் நகர்வுகள் அபாரம்" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x