Last Updated : 01 Jun, 2015 03:28 PM

 

Published : 01 Jun 2015 03:28 PM
Last Updated : 01 Jun 2015 03:28 PM

புற்று நோயாளியான 92 வயது மூதாட்டி மாரத்தான் ஓட்டத்தில் சாதனை

அமெரிக்காவின், சான் டீகோவில் 92 வயது மூதாட்டியும், புற்று நோயிலிருந்து மீண்டவருமான ஹாரியட் தாம்சன் என்ற 92 வயது மூதாட்டி அதிக வயதில் மாரத்தான் ஓடிய பெண்மணி என்ற வகையில் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்பாக 2010 ஹோனாலூலு மாரத்தானில் கிளேடிஸ் புரில் என்ற மூதாட்டி தனது 92 வயது 19 நாட்களில் சாதனை நிகழ்த்தினார். ஆனால் தற்போது ஹாரியட் தாம்சன் 92 வயது 65 நாட்களில் மாரத்தான் ஓடி சாதனை புரிந்துள்ளார்.

இது இவரது 16-வது ராக் அன் ரோல் மாரத்தான் ஓட்டமாகும். ஆனால் இது “கடினமானது” என்கிறார் ஹாரியட் தாம்சன்.

“இந்த ஆண்டு எனக்கு கடினமாக அமைந்தது. கடந்த ஜனவரியில் கணவர் இறந்து போனார். எனக்கும் ஒரு காலில் ரண சிகிச்சை நடைபெற்றது. என்னால் இந்த மாரத்தானை முழுதும் ஓடி முடித்துவிட்டேன் என்பதை உணர்ந்த போது உற்சாகமாக இருந்தது.

பயிற்சிகள் பெறவில்லை என்றாலும் 7 மணி நேரம், 7 நிமிடங்கள் 49 விநாடிகளில் இவர் கடக்க வேண்டிய தூரத்தைக் கடந்தார். இதுவே முதியோர் ஓட்டத்தில் புதிய சாதனையாக அமைந்துள்ளது.

தனது 70-வது வயது வரை மாரத்தான் பக்கம் இவர் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் லிம்போமா, லியுகேமியா புற்று நோய்களுக்கு நிதி திரட்டுவதற்காக மாரத்தானில் பங்கேற்பதற்காக இவரது சர்ச் இவரை அணுகியது.

“அவர்கள் என்னை அணுகும் நேரத்தில்தான் எனது குடும்பத்தினர் புற்று நோய் காரணமாக மரணத்தை சந்தித்தினர். எனவே நாம் இதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன், முதலாம் ஆண்டு சும்மா நடந்து செல்லலாம் என்றே நினைத்தேன். ஆனால் மற்றவர்கள் ஓடத் தொடங்கவே நானும் ஓடத் தொடங்கினேன்.

நான் மட்டும் ஓடத் தொடங்கவில்லையெனில் இப்போது உயிருடன் உங்கள் முன் நின்று கொண்டிருக்க மாட்டேன் என்றே கருதுகிறேன்” என்று 92 வயதிலும் உற்சாகம் குன்றாத இந்த மூதாட்டி கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x