Last Updated : 23 Jun, 2015 09:36 AM

 

Published : 23 Jun 2015 09:36 AM
Last Updated : 23 Jun 2015 09:36 AM

ஹாலே ஓபன் பெடரர் சாம்பியன்

ஜெர்மனியில் நடைபெற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஆண்ட்ரஸ் செபியை 7-6 (7/1), 6-4 என்ற செட் கணக்கில் பெடரர் வென்றார்.

இப்போட்டியில் விளையாட தொடங்கிய பிறகு இருமுறை மட்டுமே இறுதி ஆட்டத்தில் பெடரர் தோல்வியடைந்துள்ளார். 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் லேய்டென் ஹெவிட்டிடமும், இரு ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியின் டாமி ஹாசிடமும் மட்டும் இறுதி ஆட்டத்தில் பெடரர் தோல்வியடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x