Published : 15 Jun 2015 08:00 PM
Last Updated : 15 Jun 2015 08:00 PM

சங்கக்காரா, டிவில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளி ஸ்டீவ் ஸிம்த் முதலிடம்

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்துக்கு வந்துள்ளார்.

913 புள்ளிகள் பெற்ற ஸ்மித், சங்கக்காரா (909), டிவில்லியர்ஸ் (908) ஆகியோரை முறையே 2 மற்றும் 3-ம் இடங்களுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

தனது அபாரமான பார்மை தொடர்ந்த ஸ்டீவ் ஸ்மித், மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 199 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து அவர் முதல் நிலைக்கு முன்னேறியுள்ளார்.

2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் நடப்பு கேப்டன் மைக்கேல் கிளார்க் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்த பிறகு தற்போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் முதலிடம் பிடிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடைசி 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஸ்மித்தின் சராசரி 131.5. கடைசி 6 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள். கடந்த 17 டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்கள். இதனால் அவரது ஒட்டுமொத்த டெஸ்ட் சராசரி 56.23 ஆக உயர்ந்துள்ளது. டேவிட் வார்னர் 10-ம் இடத்தில் உள்ளார். 11-ம் இடத்தில் இந்தியாவின் விராட் கோலி. முரளி விஜய் 20-வது இடத்தில் உள்ளார்., ரஹானேவுக்கு 22-வது இடம்.

பந்துவீச்சுத் தரவரிசையில் சயீத் அஜ்மல் தற்போது 11-வது இடம். டாப்-15-ல் ஒரே இந்திய பவுலர் அஸ்வின். இவர் 12-ம் இடத்தில் உள்ளார். இசாந்த் சர்மா 19-வது இடத்தில் இருக்கிறார்.

டாப் 10 டெஸ்ட் பேட்ஸ்மென்கள்:

ஸ்மித், சங்கக்காரா, டிவில்லியர்ஸ், ஆம்லா, ஆஞ்சோலோ மேத்யூஸ், யூனிஸ் கான், ஜோ ரூட், கேன் வில்லியம்சன், மிஸ்பா உல் ஹக், டேவிட் வார்னர்.

டாப் 10 டெஸ்ட் பவுலர்கள்:

டேல் ஸ்டெய்ன், ஜேம்ஸ் ஆண்டர்சன், டிரெண்ட் போல்ட், ரியான் ஹேரிஸ், ரங்கன்னா ஹெராத், மிட்செல் ஜான்சன், ஸ்டூவர்ட் பிராட், வெர்னன் பிலாண்டர், மோர்னி மோர்கெல், டிம் சவுத்தி.

டாப் 5 டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள்:

ஷாகிப் அல் ஹசன், வெர்னன் பிலாண்டர், அஸ்வின், ஜான்சன், பிராட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x