Published : 08 Jun 2015 10:30 AM
Last Updated : 08 Jun 2015 10:30 AM

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா 5-வது முறையாக சாம்பியன்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஜுவென்டஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பார்சி லோனா அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஐரோப்பிய யூனியன் கால்பந்து சங்கங்களின் (யுஇஎஃப்ஏ) சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில், ஸ்பெயினின் பார்சிலோனா அணியும், இத்தாலி யின் ஜுவென் டஸ் அணியும் மோதின.

ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் பார்சிலோனா முதல் கோல் அடித்தது. அந்த அணியின் நடுக்கள வீரர் ராக்டிக் கோல் அடித்தார்.

இரண்டாவது பாதியில் 54-வது நிமிடத்தில் ஜுவென்டஸ் அணியின் மொராட்டா கோல் அடித்தார்.

ஆனால், பார்சிலோனா அணியின் லூயிஸ் சுவாரெஸ் 68-வது நிமிடத்திலும், கூடுதல் நேரத்தில் நெய்மரும் தலா ஒரு கோல் அடிக்க 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது பார்சிலோனா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x