Published : 29 May 2015 09:33 AM
Last Updated : 29 May 2015 09:33 AM

வங்கதேச டெஸ்ட் தொடரில் டிவில்லியர்ஸ் விலகல்

வரும் ஜுலையில் நடை பெறவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வுள்ள தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து டிவில்லியர்ஸ் விலகியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிறகு முதல் முறையாக டெஸ்ட் தொடரி லிருந்து விலகியிருக்கிறார். தனது மனைவிக்கு குழந்தை பிறக்கவிருப்பதால் டிவில்லி யர்ஸ் இந்த முடிவை எடுத்துள் ளார். இதுவரை 98 டெஸ்ட் போட்டி களில் விளையாடியிருக்கும் டிவில்லியர்ஸ், இந்தத் தொடரில் விளையாடியிருந்தால் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையைப் பெற்றி ருப்பார்.

எனினும் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர், டி20 தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறார் டிவில்லி யர்ஸ். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயி னுக்கு ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. வேகப் பந்து வீச்சாளர்கள் மோர்ன் மோர்கலுக்கு டி20 தொடரிலி ருந்தும், வெர்னான் பிலாண்ட ருக்கு டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்தும் ஓய்வளிக்கப் பட்டுள்ளன.

அதேநேரத்தில் டெஸ்ட் அணியில் ரீஸா ஹென்ரிக்ஸ், விக்கெட் கீப்பர் டேன் விலாஸ், சுழற்பந்து வீச்சாளர் ஆரோன் பங்கிசோ, வேகப்பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடா என 4 புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் அணி

ஹசிம் ஆம்லா (கேப்டன்), டியான் எல்கர், ரீஸா ஹென்ரிக்ஸ், டூபிளெஸ்ஸி, ஸ்டியான் வான் ஸில், டுமினி, டி காக், பிலாண்டர், டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல், ஆரோன் பங்கிசோ, சைமன் ஹார்மர், டெம்பா பவுமா, ரபாடா, டேன் விலாஸ்.

ஒருநாள் போட்டி

டிவில்லியர்ஸ் (கேப்டன்), டி காக், டூபிளெஸ்ஸி, ரிலீ ரொசாவ், டுமினி, டேவிட் மில்லர், பெஹார்டியன், கிறிஸ் மோரிஸ், மோர்ன் மோர்கல், இம்ரான் தாஹிர், ரபாடா, கைல் அபாட், பங்கிசோ, வேயன் பர்னெல், ரியான் மெக்லாரன்.

டி20 அணி

டூபிளெஸ்ஸி (கேப்டன்), டி காக், ரிலீ ரொசாவ், டிவில்லியர்ஸ், டுமினி, டேவிட் மில்லர், டேவிட் வியெஸ், கிறிஸ் மோரிஸ், கைல் அபாட், ரபாடா, பங்கிசோ, எடி லீய், வேயன் பர்னெல், பியூரான் ஹென்ரிக்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x