Last Updated : 10 May, 2015 12:13 PM

 

Published : 10 May 2015 12:13 PM
Last Updated : 10 May 2015 12:13 PM

ராஜீவ் கேல் ரத்னா விருது: சர்தார் சிங் பெயர் பரிந்துரை

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங்கின் பெயரை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது ஹாக்கி இந்தியா. அர்ஜுனா விருதுக்கு 11 பேரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் 6 பேர் வீராங்கனைகள் ஆவர்.

கடந்த ஓர் ஆண்டில் சர்வதேச அளவிலான ஹாக்கிப் போட்டிகளில் சர்தார் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி பல வெற்றிகளைக் குவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதோடு மட்டுமல்லாமல், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று 2016-ல் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றது.

இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரர்களான டேனிஸ் முஜ்தபா, தரம்வீர் சிங், வி.ஆர்.ரகுநாத், பி.ஆர்.ஸ்ரீஜேஷ், எஸ்.வி.சுனில், ஹாக்கி வீராங்கனைகள் அசுந்தா லகரா, தீபிகா, ராணி, ரீது ராணி, சுஷீலா சானு, வந்தனா கத்தாரியா ஆகியோரின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x