Last Updated : 12 May, 2015 09:49 AM

 

Published : 12 May 2015 09:49 AM
Last Updated : 12 May 2015 09:49 AM

இரட்டையர் தரவரிசை: இந்திய வீரர்களில் போபண்ணாவுக்கு முதலிடம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி யில் ருமேனியாவின் ஃபுளோரின் மெர்ஜியாவுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சர்வதேச இரட்டையர் தரவரிசையில் 21-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ரோஹன் போபண்ணா.

இதன்மூலம் இரட்டையர் தரவரி சையில் இந்தியாவின் முதல் நிலை வீரராக உருவெடுத்துள்ளார். மாட்ரிட் ஓபன் போட்டியில் வென்றதன் மூலம் அவருக்கு 1,000 புள்ளிகள் கிடைத்தன. இதுதவிர 3 இடங்கள் முன்னேற்றம் கண்டார்.

முன்னதாக இந்தியாவின் முதல் நிலை வீரராக லியாண்டர் பயஸ் இருந்தார். பயஸ் தற்போது சர்வதேச தரவரிசையில் 24-வது இடத்தில் இருக்கிறார். இவர்கள் தவிர வேறு எந்த இந்திய வீரரும் சர்வதேச இரட்டையர் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இல்லை.

இதற்கு முன்னர் பாகிஸ்தானின் குரேஷியுடன் இணைந்து விளையாடியபோது போபண்ணா (2013 ஜூலையில்) 3-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

யூகி முன்னேற்றம்

ஆடவர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் சோம்தேவ் 173-வது இடத்திலும், யூகி பாம்ப்ரி 180-வது இடத்திலும் உள்ளனர். யூகி பாம்ப்ரி 6 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தியாவின் சாகேத் மைனேனி 10 இடங்கள் முன்னேறி 229-வது இடத்தில் உள்ளார்.

மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஆனால் அணிகள் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி முதலிடத்தை இழந்தது. அந்த ஜோடி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பெத்தானி மடேக் சேன்ட்ஸ்-லூஸி சஃபரோவா ஜோடி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 6 இடங்கள் முன்னேறி 229-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x