Published : 20 Apr 2015 16:15 pm

Updated : 20 Apr 2015 16:15 pm

 

Published : 20 Apr 2015 04:15 PM
Last Updated : 20 Apr 2015 04:15 PM

ட்வீட்டாம்லேட்: தோற்றாலும் குறையாத சிஎஸ்கே கெத்து!

தங்களது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் முத்துக்களைத் தெறிப்பதற்காகவே ஐபிஎல் பார்க்கிறார்களோ என்று சந்தேகத்தை எழுப்புகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்சின் விசிறிகளின் பதிவுகள்.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

நடப்பு ஐபிஎல் போட்டியில் சென்னைக்கு இதுவே முதல் தோல்வி. இருப்பினும் இந்தத் தோல்வி சென்னை ரசிகர்களை அசர வைக்கவில்லை. அவர்கள் வழக்கம் போல அணியை உற்சாகமூட்டும் வகையில் வெறும் 3 பவுண்டரிகளை அடித்து வெளியேறிய மெக்கல்லமை வாழ்த்தியும், தோனிக்கு விசில் போடவும் தொடங்கினர். சென்னை ரசிகர்களின் மனம் தளராத ஆதரவு ரசிகர்களின் கருத்துக்கள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...

ராஜா ‏@Attakaathi - தட் ஊரே ஒன்னு கூடிடுச்சிடா மொமண்ட் #சிஎஸ்கே தோல்வி எதிரொலி

ஹூ அம் ஐ ‏@Ibrahim20082008 - ஜடேஜாவ தூக்கனும்னா, சென்னை தோக்கனும் #தோனி ஆறுதல்கள்_அவ்வ்வ்...

ஐபிஎல் ‏@IPLkarki - காதலன்ல வடிவேலு பஸ் பிடிக்கிற சீன புடிச்சி 'மீம்' போடணும். "நிக்குற பஸ்ல ஏர்ற..,இறங்குற.." #தோனி....அடியேன்பா..

சுவோ MSடியன் ‏@SIR_Suvo_Mahi - இன்று மோசமான நாள். அமைதியாக சிஎஸ்கே-வுக்கு விசில் போடுங்க

சுபம் ‏@MSDsuperfan - ஜெயித்தாலும் தோத்தாலும் சிஎஸ்கே டா, தோனி டா, கெத்து டா

அப்பாவி ‏@appaavi88 - அடிச்சி தொவச்சி காயப்போட்டானுங்க #ஐபிஎல்

நாடோடிச் சிறுத்தை ‏@T_cheeta - கில்லி விளையாடுறவனை எல்லாம் கூப்பிட்டு கிரிக்கெட் ஆட விட்ட இப்படி தான் அடிப்பான் #மெக்கலம்

சாம்ராட் ‏@Its_SaamRaat - முதல் எட்டில் வராதது ஃபார்முமல்ல.. நீ ரெண்டாம் எட்டில் தட்டாதது ஃபோரும் அல்ல.. மூன்றாம் எட்டில் தட்டாதது சிக்ஸும் அல்ல.. #ஐபிஎல் #IPL நேரம் டா..

க்யாங் ஹய் ‏@_finite - ஆமா... நான் எங்கிருக்கேன்!! நீங்கெல்லாம் யாரு?? #ஐபிஎல்'னா என்ன?

கொங்கு மோகன் - இவ்ளோ நேரம் விளையாடுனது கனவில்லையா?, சரி மறுபடியும் பவுலிங் போடுங்க...‪#‎தோனி‬

ட்விட்டர் ஹிட்லர் ™ ‏@Rajasirr - கெட்ட பசங்க சார் இந்த ஸ்மித் & மெக்கல்லம் #சிஎஸ்கே கெத்து..

கார்த்திக் ஆறுமுகம் ‏@iam_K_A - கிடைத்தது #தோல்வி தான், #பயமல்ல !!

முடிந்தது #பந்தயம் தான், #பயணமல்ல !!

ஆல்தோட்டபூபதி @thoatta - என்னடா கிணத்துக்குள்ள இருந்து சத்தம் வருது? ஓ, பாயிண்ட் டேபிள்ல கடைசியா கிடக்குற மும்பை, டெல்லி ரசிக குஞ்சுகளா?

ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா ‏@Ulaganandha - சென்னை தோக்கறத இத்தன பேரு ரசிக்கிறீங்கன்னா எந்த அளவுக்கு பயந்துருப்பீங்க.. பொழச்சு போங்கடா!

@danielbalaji - இன்று #சென்னை அணி்க்கு #முதல் தோல்வி #மும்பை அணிக்கு #முதல் வெற்றி #Effect_of_விஜய் அண்ணா_FRIENDS_movie

VIJAYARAJAN ‏@KVIJAY1962 - ரவீந்திர ஜடேஜா வை நம்பினால் கடைசி ஆட்டத்தில் சென்னை இருக்காது

Sampath ‏@sampathperumal - சென்னை தோக்கறதும் மும்பை ஜெயிக்கிறதும் என்னைக்காச்சும் தான் நடக்கும்.. ஒரே நாள்ல நடக்குது.. அவ்ளோதான்! ;)) #CSKvsRR #RCBvMI

திரு.முட்டாள் ‏@imuttaal - ஒரு மேட்சாவாது லீக்ல சென்னை தோக்கணும் ...அப்பனாதான் கப்படிக்கும் ...ஆங்!

I'm a Thala Veriyan ‏@ArunArun707 - சென்னை தோத்துருச்சாம். அடப்பதருகளா... டைரக்ட் பைனல் போற டீம் தோத்தா என்ன ஜெயிச்சா என்ன?

சந்நியாசி ‏@sanniyaasi - சென்னை தோற்று போச்சானு கேக்கறான் பக்கத்து வீட்டு பையன்.. இதுதான் சி.எஸ்.கே பேன்ஸ். பாவம் அவனே கன்பியூஸ் ஆகிட்டான்..

Senthur Kumaran ‏@Senthur_Kumaran - இன்னைக்கு தோற்றது நல்லது தான் ஏன்னா எல்லா போட்டியிலும் வென்ற அணி இதுவரை சம்பியன் ஆனதில்லை அதால தாண்டா இன்னைக்கு சென்னை தோற்றது #cskடா #CSK

ஃ பாண்டியன் ஃ ‏@catchpandian1- சென்னை/தோனி தோத்தா ஏழு டீம்ல இருந்தும் ஆள் வந்துரானுக... எங்கடா இருந்தீங்க இவ்ளோ நேரம்... பாதி மேட்ச் வரைக்கும் ஆளையே காணோமே?

கபடவேடதாரி ‏@kapadavedathari - ஜெயிச்சு ஜெயிச்சு சென்னை டயர்டாகிட்டாங்க. ஒரு சேஞ்சுக்கு தோல்வி. தட்ஸ் ஆல்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

#ட்வீட்டாம்லேட்ஐபிஎல்சூப்பர் கிங்ஸ்சென்னைதோனிராஜஸ்தான்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author