Last Updated : 13 Apr, 2015 02:55 PM

 

Published : 13 Apr 2015 02:55 PM
Last Updated : 13 Apr 2015 02:55 PM

ஆஷஸ் தொடரைக் குறிவைக்கும் கெவின் பீட்டர்சன் 170 ரன்கள் விளாசல்

மீண்டும் இங்கிலாந்து அணியில் நுழைய அவருக்குப் பிடித்தமான ஐபிஎல் கிரிக்கெட் ஒப்பந்தத்தையே கைவிட்ட கெவின் பீட்டர்சன் கவுன்ட்டி கிரிக்கெட்டில் அதிரடி 170 ரன்கள் விளாசினார்.

சர்ரே அணிக்காக அவர் நேற்று 170 ரன்களை விளாசினார்.

ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து 5-0 என்று உதை வாங்கிய பிறகு கெவின் பீட்டர்சன் பலிகடாவாக்கப்பட்டார். இவரை நீக்கியதில் ஸ்டூவர்ட் பிராட், மேட் பிரையர் பயிற்சியாளர் மூர்ஸ், கேப்டன் குக் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க பங்காற்றினர்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தோல்வி அடைந்த பிறகு இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் மீண்டும் திரும்புவது பற்றிய பேச்சுக்கள் எழுந்தன. இந்நிலையில் இங்கிலாந்துக்காக மீண்டும் ஆடும் தனது வாய்ப்பைத் தக்கவைக்குமாறு ஐபில் ஒப்பந்தத்தையே கைவிட்டார் பீட்டர்சன்.

ஆனால் முதல் தர கிரிக்கெட் தகுதி பெறாத நேற்றைய போட்டியில் ஆக்ஸ்போர்ட் எம்.சி.சி. பல்கலைக் கழக அணிக்கு எதிராக இந்த 170 ரன்களை எடுத்தார் பீட்டர்சன்.

மாணவர்களின் பந்து வீச்சுக்கு எதிராக 170 ரன்களை எடுத்தது அவரது விமர்சகர்கள் வாய்க்கு தீனி போடுவது போல் அமைந்தது. ஆனால் பீட்டர்சனைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணிக்கு திரும்பும் தனது நோக்கத்தில் உள்ள தீவிரத்தை இங்கிலாந்து ரசிகர்களிடத்தும், அணித் தேர்வுக்குழுவினரிடத்தும் உணர்த்துவதே, இந்த வகையில் யாருக்கு எதிராக என்பதை விட தீவிரம் காட்டிய பீட்டர்சன் என்ற ஒன்றே இந்த 170 ரன்களை நல்ல தொடக்கமாக காணச் செய்துள்ளது.

அனைத்து சர்வதேச கிரிகெட்டிலும் இங்கிலாந்தின் முன்னணி ரன் ஸ்கோரரான பீட்டர்சன், நேற்று 149 பந்துகளில் 24 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x