Published : 13 Mar 2015 09:40 AM
Last Updated : 13 Mar 2015 09:40 AM

ரஞ்சி கோப்பையை தக்கவைத்தது கர்நாடகம்: தமிழகம் இன்னிங்ஸ் தோல்வி

ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கர்நாடக அணி இன்னிங்ஸ் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகத்தை தோற்கடித்து கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.

மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 134 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய கர்நாடக அணி 231.2 ஓவர்களில் 762 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் கருண் நாயர் 328 ரன்களும், ராகுல் 188 ரன்களும், கேப்டன் வினய் குமார் 105 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து 628 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய தமிழகம் 4-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தமிழக அணி 107.5 ஓவர்களில் 411 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழகம் தரப்பில் தினேஷ் கார்த்திக் 120 ரன்களும், சங்கர் 103 ரன்களும் குவித்தனர்.

முச்சதம் அடித்த கர்நாடக வீரர் கருண் நாயர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். கோப்பையை வென்ற கர்நாடகத்துக்கு ரூ.2 கோடியும், தமிழகத்துக்கு ரூ.1 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x