Last Updated : 05 Jan, 2015 12:21 PM

 

Published : 05 Jan 2015 12:21 PM
Last Updated : 05 Jan 2015 12:21 PM

சிட்னி டெஸ்ட்: மிட்செல் ஜான்சன் விலகல்

தசைநார் முறிவு காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் சிட்னி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி, நாளை முதல் சிட்னி யில் தொடங்குகிறது. 2-0 என முன்னிலை வகிக்கும் ஆஸ்தி ரேலியா, டெஸ்ட் தொடரை வென் றுள்ளது. இந்நிலையில் தசைநார் முறிவு காயம் காரணமாக மிட்செல் ஜான்சன் சிட்னி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயத்துடன் சிட்னி டெஸ்டில் ஜான்சன் விளையாடினால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டியில் அவர் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் சிட்னி டெஸ்டில் பங்கேற்பதில்லை என்கிற முடிவை ஜான்சன் எடுத்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜான்சனுக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

நினைவில் நிற்கும் ஹியூஸ்

ஹியூஸ் சம்பவத்தை மறக்கவேமுடியாது. அது எப்போதும் நினைவில் நிற்கும் என்று டேவிட் வார்னர் கூறியுள் ளார். சிட்னியில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், பவுன்சரால் கழுத்தில் காயம்பட்ட 25 வயது ஆஸி. வீரர் பிலிப் ஹியூஸ், இரண்டு நாள்கள் கழித்து மருத்துவமனையில் மரணமடைந்தார். ஹியூஸ் பங்கேற்ற அந்தப் போட்டியில் வார்னர், ஹேடின், லயன், வாட்சன் ஆகிய ஆஸி. வீரர்களும் விளையாடினார்கள். இப்போது அதே மைதானத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இதுபற்றி வார்னர் கூறும்போது:

ஹியூஸ் மரணமடைந்தபிறகு மீண்டும் இங்கு வந்து ஆடவுள்ளோம். இதனால் எங்கள் உணர்வுகளைக் கட்டுப் படுத்துவது சிரமம் என்று நினைக்கிறேன். இனி, சிட்னி யில் எப்போது கிரிக்கெட் ஆடினாலும் ஹியூஸ் சம்பவத்தை நினைக்காமல் இருக்க முடியாது.

சமீபத்தில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அதனால் ஹியூஸ் மரணத்தினால் உண் டான பாதிப்பிலிருந்து ஓரளவு மீண்டு வர முடிந்தது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x