Published : 16 Dec 2014 07:41 PM
Last Updated : 16 Dec 2014 07:41 PM

ஐபிஎல் அணிகளிலிருந்து கெவின் பீட்டர்சன், யுவராஜ், ஜாகீர் கான் உள்ளிட்டோர் விடுவிப்பு

டெல்லி டேர் டெவில்ஸ், ஆர்.சி.பி. உள்ளிட்ட ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளிலிருந்து முக்கிய வீரர்களை விடுவித்துள்ளது.

டெல்லி டேர் டெவில்ஸ் அணி கெவின் பீட்டர்சன், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், உனட்கட், ராஸ் டெய்லர், லஷ்மி ரத்தன் சுக்லா, ராகுல் ஷர்மா, வெய்ன் பார்னெல், ஜேம்ஸ் நீஷம், சித்தார்த் கவுல், ராகுல் ஷுக்லா, ஷரத், மிலிந்த் குமார் ஆகியோரை அணியிலிருந்து விடுவித்துள்ளது.

டுமினி, மொகமது ஷமி, குவிண்டன் டி காக், மனோஜ் திவாரி, கூல்டர் நைல், இம்ரான் தாஹிர், கேதர் ஜாதவ், மயங்க் அகர்வால், ஷாபாஸ் நதிம், சவுரவ் திவாரி ஆகியோரை தக்க வைத்துள்ளது.

சில வீரர்களை விடுவிப்பதன் மூலம் பணம் மிச்சப்பிடிக்கப்பட்டு புதிய வீரர்கள் மீது முதலீடு செய்ய முடியும் என்று டெல்லி அணியின் தலைமை செயல் அதிகாரி ஹேமந்த் துவா கூறியுள்ளார்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு:

கடந்த ஐபிஎல் ஏலத்தின் போது யுவராஜ் சிங்கை 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த ராயல் சாலஞ்சர்ஸ் அணி அவரை தற்போது விடுவித்துள்ளது. இத்தனைக்கும் யுவராஜ் சிங் அதிக ரன்கள் எடுத்த 2-வது ராயல் சாலஞ்சர்ஸ் வீரர் ஆவார். 376 ரன்களை 34 என்ற சராசரியுடன் 3 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். இவர் தவிர முத்தையா முரளிதரன், ஆல்பி மோர்கெல், ரவி ராம்பால், சச்சின் ரானா, ஜகதி, தன்மய் மிஸ்ரா.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

டேவிட் ஹஸ்ஸி, ஜான் ஹேஸ்டிங்ஸ், பென் ஹில்பென்ஹாஸ், உள்ளூரைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோரை நீக்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை இந்தியன்ஸ் அணி ஜாகீர் கான் உட்பட 8 வீரர்களை விடுவித்துள்ளது. பிராக்யன் ஓஜாவையும் சேர்த்து விடுவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். மேலும் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பென் டன்க், வெஸ்ட் இண்டீஸின் இடதை கை ஸ்பின்னர் சண்டோகி, உள்நாட்டு வீரர்களான ஜலஜ் சக்சேனா, சி.எம். கவுதம், அபூர்வ் வான்கடே, மற்றும் சுசாந்த் மராத்தே. பார்த்திவ் படேலை ராயல் சாலஞ்சர்ஸிலிருந்து மும்பை வாங்கியதால் அந்த அணியில் இருந்த அதிக விக்கெட் கீப்பர்களை மும்பை வெளியேற்றியுள்ளது.

சன் ரைசர்ஸ்:

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 வீரர்களை விடுவித்துள்ளது. ஆரோன் ஃபின்ச், டேரன் சாமி, இந்திய வீரர்களான அமித் மிஸ்ரா, இர்பான் பத்தான், ஜேசன் ஹோல்டர், ஜிம்பாவே விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மென் பிரெண்டன் டெய்லர், உள்நாட்டு வீரர் வேணுகோபால் ராவ், பிரசாந்த் பரமேஸ்வரன், அனிருதா ஸ்ரீகாந்த், மன்ப்ரீத் ஜுனேஜா ஆகியோரை விடுவித்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

புஜாரா, எல்.பாலாஜி, முரளி கார்த்திக் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஜாக் காலிஸ், தேவவரத தாஸ், சயன் மோண்டல்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

பிராட் ஹாட்ஜ், கெவின் கூப்பர், அன்கிட் சர்மா, அமித் சர்மா, அங்குஷ் பெய்ன்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x