Published : 14 Dec 2014 01:18 PM
Last Updated : 14 Dec 2014 01:18 PM

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவை வெளியேற்றியது பாக்.

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் போராடித் தோற்றது.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜெர்மனியை சந்திக்கிறது பாகிஸ்தான். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் இந்தியாவின் குருஜிந்தர் சிங் பெனால்டி கார்னர் மூலம் கோலடித்தார். ஆனால் 17-வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது பாகிஸ்தான். இந்த கோலை காதிர் அடித்தார்.

இதையடுத்து 32-வது நிமிடத்தில் பாகிஸ்தான் 2-வது கோலை அடித்தது. இந்த கோலை வகாஸ் அடித்தார். 42-வது நிமிடத்தில் இந்தியா மீண்டும் கோல் அடித்து 2-2 என சமன் செய்தது. இந்த கோலை தரம்வீர் சிங் அடித்தார். 50-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் மூலம் கோலடித்த பாகிஸ்தான், மீண்டும் முன்னிலை பெற்றது.

இந்த கோலை இர்ஃபான் அடித்தார். அடுத்த 2 நிமிடங்களில் இந்தியாவின் திம்மையா கோலடித்து ஆட்டத்தை மேலும் பரபரப்பாக்கினார். ஆனால் 58-வது நிமிடத்தில் பாகிஸ்தானின் காதிர் மீண்டும் கோலடிக்க, பாகிஸ்தான் 4-3 என்ற கணக்கில் வெற்றி கண்டது.

ஜெர்மனி வெற்றி மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

இறுதிப் போட்டி : ஜெர்மனி - பாகிஸ்தான் நேரம்: இரவு 7.30 நேரடி ஒளிரப்பு

3-வது இடத்துக்கான போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா நேரம்: மாலை 5.15 நேரடி ஒளிரப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x