Published : 27 Dec 2014 11:08 AM
Last Updated : 27 Dec 2014 11:08 AM

மெக்கல்லம் சிக்ஸர் மழை: சில புள்ளிவிவரங்கள்

# 429 - நேற்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து 429 ரன்கள் குவித்தது. இதன்மூலம் நியூஸிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் எடுக்கப்பட்ட 4-வது அதிகபட்ச ஸ்கோரை சமன் செய்தது.

# 195 - நேற்றைய ஆட்டத்தில் மெக்கல்லம் எடுத்த 195 ரன்கள் அவருடைய 5-வது அதிகபட்ச ஸ்கோராகும். அவர் இன்னும் 5 ரன்கள் எடுத்திருந்தால் அதிவேக இரட்டைச் சதமடித்தவர், ஓர் ஆண்டில் கிளார்க்கிற்கு அடுத்தபடியாக 4 இரட்டை சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்திருப்பார். நாதன் ஆஸ்ட்லே 153 பந்துகளில் இரட்டை சதமடித்ததே இன்றளவும் அதிவேக இரட்டை சதமாக உள்ளது.

# 74 பந்துகளில் சதமடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிவேக சதமடித்த நியூஸிலாந்து வீரர் என்ற தனது முந்தைய சாதனையை (78 பந்துகள்) மெக்கல்லம் முறியடித்தார்.

# 11 - நேற்று 11 சிக்ஸர்களை விளாசிய மெக்கல்லம், டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசியவர்கள் வரிசையில் 2-வது இடத்தை நாதன் ஆஸ்ட்லே, மேத்யூ ஹேடன் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்தில் வாசிம் அக்ரம் (12 சிக்ஸர்கள்) உள்ளார்.

# 33 - ஓர் ஆண்டில் அதிக சிக்ஸர்களை விளாசியவர்கள் வரிசையில் மெக்கல்லம் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் அவர் 33 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆடம் கில்கிறிஸ்ட் (2005), வீரேந்திர சேவாக் (2008) ஆகியோர் 22 சிக்ஸர்களுடன் 2-வது இடத்தில் உள்ளனர்.

# 1164 - இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 1,164 ரன்கள் குவித்துள்ளார் மெக்கல்லம். இதற்கு முன்னர் 2008-ல் 764 ரன்கள் குவித்ததே ஓர் ஆண்டில் அவர் எடுத்த அதிகபட்ச ரன் சாதனையாக இருந்தது.

# 26 - நேற்றைய ஆட்டத்தில் லக்மல் வீசிய 55-வது ஓவரை எதிர்கொண்ட மெக்கல்லம், அதில் 26 ரன்கள் (4,6,6,0,4,6) எடுத்தார். இதன்மூலம் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 4-வது இடத்தை மேக்மில்லன், லாரா, ஜான்சன் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். லாரா, ஜார்ஜ் பெய்லி ஆகியோர் 28 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x