Published : 17 Dec 2014 11:03 AM
Last Updated : 17 Dec 2014 11:03 AM

2-0 என முன்னிலை பெறுவோம் - ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறியதாவது:

2-வது டெஸ்டிலும் வென்று 2-0 என முன்னிலை பெற விரும்புகிறோம். அடிலெய்டு, யூஏஇ போன்ற இடங்களில் விளையாடியபிறகு பிரிஸ்பேனில் உள்ள வேகமான ஆடுகளம், எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பரவசத்தை அளிக்கும். அதனால்தான் எங்கள் அணியில் மிட்சல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேஸில்வுட்டை சேர்த்துள்ளோம்.

கடந்த சில வருடங்களாக ஹேஸில்வுட்டை கவனித்து வருகிறேன். நாளுக்கு நாள் அவர் முன்னேறிக்கொண்டிருக்கிறார். இந்த பிட்ச் அவருக்குப் பொருத்தமாக இருக்கும். பீட்டர் சிடிலை அணியிலிருந்து நீக்கியது வருத்தமளிக்கிறது. அவர் நீண்டகாலமாக ஆஸி. அணிக்குத் தனது பங்களிப்பை தந்தவர். அவர் இன்னும் எங்கள் அணியில்தான் உள்ளார். அடுத்த ஆட்டங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். நான் நான்காவதாக களமிறங்குவது பற்றி முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளரிடம் விவாதித்தேன். நான்காவதாக களமிறங்கி பணியை சிறப்பாக முடிப்பேன். உண்மையில் நான்காவதாக அல்லது ஐந்தாவதாக களமிறங்குவதில் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆக்ரோஷமாக விளை யாடினாலும் எங்கள் அணி வீரர்கள் யாரும் எல்லைக் கோட்டை தாண்டமாட்டார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

ஆஸி.க்கு ராசியான பிரிஸ்பேன்

பிரிஸ்பேன் மைதானத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியா எந்த அணியிட மும் டெஸ்ட் போட்டியில் தோற்றதில்லை. கடைசியாக 1988-ல் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற் றுள்ளது ஆஸ்திரேலியா. அதன் பிறகு இங்கு 25 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா 18 வெற்றிகளையும், 7 டிராவையும் பதிவு செய்துள்ளது.

பிரிஸ்பேன் மைதானத்தில் இதுவரை இந்தியா வெற்றி பெற்றதில்லை. அங்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி ஒரு டிராவையும், 4 தோல்வியையும் பதிவு செய்துள் ளது. 2003-ல் கங்குலி தலைமை யிலான இந்திய அணி மட்டுமே பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்தி ரேலியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி டிரா செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x