Published : 05 Dec 2014 03:16 PM
Last Updated : 05 Dec 2014 03:16 PM

பவுன்சர்களை சுதந்திரமாக வீசிய இந்திய, ஆஸ்திரேலிய பவுலர்கள்

பிலிப் ஹியூஸ் பவுன்சர் தாக்கி அகால மரணமடைந்ததையடுத்து ஆஸ்திரேலிய நாடே துக்கம் அனுஷ்டித்து வருகிறது. இந்நிலையில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும், வலைப்பயிற்சியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களும் பவுன்சர்களை சரமாரியாகவே வீசினர்.

அடிலெய்டில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் முதல் நாள் ஆட்டத்தில் மொகமது ஷமி, வருண் ஆரோன், உமேஷ் யாதவ் சுதந்திரமாக பவுன்சர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா பேட்ஸ்மென்களுக்கு எதிராக வீசினர்.

பிலிப் ஹியூஸ் மரணம் என்பதையெல்லாம் பின்னுக்குத் தள்ளியதோடு, பவுன்சர்கள் வீசுவதில் எங்களுக்கு எந்த வித தயக்கமும் இல்லை என்பது போல் வீசினர்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா வீரர் செப் காட்ச் என்பவருக்கு வருண் ஆரோன் பவுன்சர் வீசி தாக்கினார். அதற்கு விராட் கோலி கைதட்டி பாராட்டுதல் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக அலெக்ஸ் கீத் என்ற பேட்ஸ்மென் மொகமது ஷமி வீசிய ஷாட் பிட்ச் பந்து விரலைத் தாக்க கீத் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.

பிலிப் ஹியூஸ் மரணத்தையடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மனநிலையில் ஆஸ்திரேலிய அணியினர் இருக்க மாட்டார்கள் என்ற கணிப்பையும் அவர்களது வலைப்பயிற்சி ஆக்ரோஷம் பொய்யாக்கியுள்ளது.

இன்று முழுமூச்சுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர் ஆஸ்திரேலிய வீரர்கள். ஜோஸ் ஹேசில்வுட் முதல் பவுன்சரை இன்று வீசினார். அது ஷான் மார்ஷின் ஹெல்மெட்டைக் கடந்து சென்றது.

மீண்டும் ஷேன் வாட்சன் பேட் செய்ய வந்த போது ஹேசில்வுட் ஒரு பவுன்சரை வீசினார். மார்ஷ், பீட்டர் சிடில் வீசிய பவுன்சருக்கு தலைகுனிந்தார். சிடில் வீசிய ஒரு முகத்திற்கு நேரான பவுன்சரை தொடக்க வீரர் கிறிஸ் ராஜர்ஸ் தடுக்க கடுமையாக போராடியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், விசித்திரமாக மிட்செல் ஜான்சன் ஒரு பவுன்சரைக் கூட வீசவில்லை.

ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன், வீரர்கள் ஆக்ரோஷ அணுகுமுறைக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணி ஆஸ்திரேலிய அணி போல் ஆட வேண்டும், அதைத்தான் மக்கள் விரும்புகின்றனர் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x