Last Updated : 24 Nov, 2014 09:47 AM

 

Published : 24 Nov 2014 09:47 AM
Last Updated : 24 Nov 2014 09:47 AM

மெஸ்ஸி புதிய சாதனை

லா லிகா என அழைக்கப்படும் ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சி லோனா அணி 5-1 என்ற கோல் கணக்கில் செவில் அணியைத் தோற்கடித்தது. இதில் பார்சிலோனா வீரர் மெஸ்ஸி ஹாட்ரிக் கோலடித்தார்.

இதன்மூலம் லா லிகா வரலாற்றில் அதிக கோலடித்தவர் (253 கோல்கள்) என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த மெஸ்ஸி. தனது 289-வது ஆட்டத்தில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். முன்னதாக ஸ்பெயினின் டெல்மோ சாரா 251 கோல்களை (278 ஆட்டம்) அடித்ததே சாதனையாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x