Last Updated : 09 Jul, 2019 04:42 PM

 

Published : 09 Jul 2019 04:42 PM
Last Updated : 09 Jul 2019 04:42 PM

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஓன்று அல்லது 2 அணிகளுடன் நிலைபெற முடியாமல் போனது: யுவராஜ் சிங் வருத்தம்

2007 டி20 உலகக்கோப்பை, 2011  உலகக்கோப்பை இரண்டிலும் யுவராஜ் சிங் பங்களிப்பில்லாமல் தோனி கோப்பையைத் தூக்கி இருக்க முடியாது, ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி போலவோ, கோலி போலவோ ஒரு அணியுடன் தன்னை நிலைபெறச் செய்து கொள்ள முடியவில்லை என்று யுவராஜ் சிங் லேசாக வருத்தப்பட்டார்.

 

பணமழை ஐபிஎல் கிரிக்கெட் தொடர்கலில் சுமார் 6 அணிகளில் ஆடியுள்ளார் யுவராஜ் சிங். 2016-ல் சன் ரைசர்ஸ் ஹைதராபாது கோப்பையை வென்ற போது யுவராஜ் சிங் அந்த அணியில் ஆடினார், அதே போல் 2019 ஐபிஎல் தொடரை மும்பை இந்தியன்ஸ் வெல்லும் போது அணியில் யுவராஜ் இருந்தார்.

 

2014 ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங் தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக திகழ்ந்தார். கொல்கத்தா அணியுடன் நடந்த ஏலப்போட்டியில் ஆர்சிபி அணி ரூ.14 கோடிக்கு யுவராஜ் சிங்கை ஏலம் எடுத்தது.

 

இந்நிலையில் இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் 91வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற யுவராஜ் சிங் ஒரு அணி அல்லது 2 அணிகளில் மட்டும் செட்டில் ஆக முடியாதது பற்றி கூறும்போது, “ஒரு குறிப்பிட்ட ஐபிஎல் அணியுடன் நான் செட்டில் ஆக முடியாமல் போனதர்கான காரணத்தை என்னால் விளக்க முடியாது. ஒரு அணிக்கோ, அல்லது 2 அணிக்கோ மட்டுமே ஆடுமாறு எனக்கு அமையவில்லை.

 

நான் ஏறக்குறைய கொல்கத்தாவுக்கு ஆடியிருக்க வேண்டும், ஆனால் கடைசி நிமிடத்தில் ஆர்சிபி என்னை ஏலம் எடுத்தது.  ஆர்சிபி அணியில்தான் என்னுடைய சிறந்த ஐபிஎல் சீசன் அமைந்தது என்பது ஒரு புறம் இருந்தாலும் கொல்கத்தாவுக்கு ஆட முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.

 

எனக்கு இதனால் ஒன்றும் இல்லை. இந்த அனைத்து அணிகளுக்கும் ஆடியது பெருமையளிக்கிறது, மும்பையுடன் ஆடி கோப்பையை வென்றத், சன் ரைசர்ஸ் அணி கோப்பையை வென்ற போது அந்த அணியில் ஆடியது ஒரு மிகப்பெரிய அனுபவம்.

 

முதல் உலக டி20 கிரிக்கெட் தொடர் டி20 கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியது. 6 சிக்சர்கள் அடித்த தினம் என் தினமாக அமைந்தது. 5வது பந்து யார்க்கர் ஆனாலும் அதனை வெளியே அடிக்க என்னால் முடிந்தது ஏனெனில் அது என்னுடைய தினம்.

 

அப்போது ஒரு புதிய கேட்பன், நாங்கள் வெல்வோம் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் அச்சமற்ற ஒரு கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். சில முக்கியப் போட்டிகளை இழந்தோம், ஆனால் இறுதிக்குள் வர 3 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய நிலை இருந்தது, வந்தோம் எங்களை நாங்கள் வெளிப்படுத்தினோம்” என்றார் யுவராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x