Published : 29 Jun 2019 03:09 PM
Last Updated : 29 Jun 2019 03:09 PM

பயிற்சி ஆட்டத்தில் பாக்.ஐ வீழ்த்தினோம்: டாஸ் வென்று பேட் செய்யும் ஆப்கான் அணி கேப்டன் குல்பதின் நயீப்

லீட்ஸில் நடைபெறும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 36வது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

 

ஆப்கானிஸ்தான் அணியில் மொகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகிய 3 ஸ்பின்னர்கள் உள்ளனர். பிட்சும் பிற்பாடு ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் ஆதரவாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதனால் முதலில் பேட் செய்ய ஆப்கான் முடிவெடுத்துள்ளது.

 

நல்ல முடிவுதான் ஏனெனில் பாகிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்து அந்த அணியின் பாபர் ஆஸம், ஹாரிஸ் சொஹைல் உள்ள பார்முக்கு 300 அடித்து விட்டால் அங்கேயே ஆட்டம் முடிந்து விடும், ஆகவே ஆப்கான் அணி ஒரு 220-240 ரன்களை எடுத்து பாகிஸ்தான் விரட்டும் போது முன்னதாக 2-3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நெருக்கடி கொடுக்க முடிந்தால் அது உண்மையில் ஒரு நல்ல போட்டியாக மாறும் என்பதே சரியானது

 

ஆனால் குல்பதின் நயிப் என்ன கூறுகிறார் என்றால், “இந்தப் பிட்ச் நன்றாக உள்ளது, நல்ல வெயில் அடிக்கிறது, பிற்பாடு ஸ்பின்னர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பாகிஸ்தான் அணி மீண்டு எழுந்துள்ளது, பயிற்சி ஆட்டத்தில் அவர்களை வீழ்த்தினோம் எனவே 100% இந்த ஆட்டத்தில் திறனை வெளிப்படுத்துவோம், தவ்லத் சத்ரானுக்குப் பதில் ஹமித் ஹசன் வந்துள்ளார். அணியில் வேறு மாற்றமில்லை என்றார்.

 

பாகிஸ்தான் அணியில் மாற்றமில்லை. பாகிஸ்தான் வென்றால் 9 புள்ளிகள் பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x