Last Updated : 05 Jul, 2017 06:40 PM

 

Published : 05 Jul 2017 06:40 PM
Last Updated : 05 Jul 2017 06:40 PM

18 மாதங்களுக்கு முன்னால் ஏற்பட்ட ஆன்மீகத் தெளிவு: கிரிக்கெட் வீரர் மனன் வோரா பேட்டி

சண்டிகர் அதிரடி வீரர் மனன் வோரா தன் வாழ்க்கையை மாற்றியது ஆன்மீகமே என்று கூறியுள்ளார்.

அதாவது அவசரகதி வாழ்க்கை, போட்டிகளுக்குப் பிறகான இரவு நேர கேளிக்கை விருந்துகள் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் மனன் வோரா போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை பார்ப்பது ஆச்சரியம், அதுவும் 23 வயதில் ஆன்மீகத் தெளிவு பற்றி அவர் பேசுகிறார் என்றால் அது அவரது முதிர்ச்சியைக் காட்டுவதாக அமைகிறது.

சென்னையில் குரோம்பெஸ்ட் முதல் டிவிஷன் டி.என்.சி.ஏ கிரிக்கெட் லீக் அணிக்காக அவர் ஆட வந்துள்ளார். அப்போது தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் அவர் கூறும்போது,

ஆன்மிகமே என் கிரிக்கெட்டையும் பேட்டிங்கையும் மாற்றியது. நாம் நம்மால் இயன்றதைச் சிறந்த முறையில் செய்து விட்டு கடவுள் கையில் விட்டு விட வேண்டியதுதான்.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு குறிப்பிட்ட தருணம் ஏற்படும், அத்தருணத்தில் கடவுள் அவரைச் சந்திக்க விரும்புவார். எனக்கு அந்த அனுபவம் 18 மாதங்களுக்கு முன்பாக ஏற்பட்டது, அது என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

இப்போது என் மீது சுமை இல்லை, அழுத்தம் எதுவும் இல்லை, மனம் லேசாகி விட்டது. நான் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடிகிறது, எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது.

சேவாக் எப்போதும் என்னை சுதந்திரமாக ஆடச் சொல்வார், ஷாட்களை கவலையின்றி ஆடு என்பார், ரசிகர்களைக் குஷிப்படுத்துவதே உனது வேலை என்பார் சேவாக்.

சென்னை முதல் டிவிஷன் லீகில் ஆடக் காரணம், டெஸ்ட் போட்டிகளுக்காக என்னைத் தயார் படுத்திக் கொள்ளவே இங்கு ஆட முடிவெடுத்தேன். இங்கு பிட்ச்கள் வித்தியாசமானவை, நல்ல வீரர்களுடன் தரமான கிரிக்கெட் இங்கு ஆடப்படுகிறது.

ஆரம்பத்தில் சச்சின் டெண்டுல்கர் ஆடுவது போல் அவரை அப்படியே காப்பி செய்ய முயற்சித்தேன்.

இவ்வாறு கூறினார் மனன் வோரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x