Published : 27 Jul 2017 04:07 PM
Last Updated : 27 Jul 2017 04:07 PM

பாகிஸ்தான் கிரிக்கெட்டைக் குட்டிச்சுவராக்கியது வக்கார் யூனிஸ்: கம்ரன் அக்மல் கடும் சாடல்

வக்கார் யூனிஸ் ஒரு பயிற்சியாளராக தோல்வி அடைந்தவர், அவரால் பாகிஸ்தான் கிரிக்கெட் குட்டிச்சுவராகிவிட்டது என்று விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் கடுமையாகச் சாடினார்.

ஜியோ சூப்பர் சானலுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘வக்கார் பயிற்சியாளராக தோல்வியடைந்தவர், அவரால் பாகிஸ்தான் அணிக்கு ஏகப்பட்ட சேதம், பரிசோதனை முயற்சிக்கான தன்னார்வத்தில் நிரூபித்த வீரர்களை வீட்டுக்கு அனுப்பி அணியைக் குட்டிச்சுவராக்கியதோடு 2-3 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தி விட்டார்.

சில வீரர்களுக்கும் அவருக்கும் பிரச்சினை இருந்தது. பாகிஸ்தான் அணியை முன்னுக்கு எடுத்தச் செல்வது எப்படி என்ற திட்டம் எதுவும் அவரிடமில்லை. இதற்கு உதாரணம் கூற வேண்டுமெனில் 2015 உலகக்கோப்பையில் யூனிஸ் கானை தொடக்க வீரராக களமிறங்குமாறு கேட்டார். மேலும் சர்பராஸ் அகமடை தாமதமாக அணிக்குக் கொண்டு வந்தார்.

உமர் அக்மல் ஆசியக் கோப்பையில் சதம் எடுத்தார், அடுத்த போட்டியிலேயே ஷாகித் அஃப்ரிடிக்குப் பின்னால் இறக்கப்பட்டார். வக்கார் யூனிஸ் அணிக்கு சிறந்த வீரர் ஆனால் பயிற்சியாளராக அவர் தோல்வி அடைந்தார்.

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் 6-7 புதுமுகங்களை அழைத்துச் சென்றார் என்னாயிற்று? ஒருநாள் மற்றும் டி20 தொடரை அவர்களிடம் முதல் முறையாக இழந்தோம்.

பயிற்சியில் கடினம் காட்டுவார் வக்கார் யூனிஸ், ஆனால் வீரர்களின் திறன் வளர்ச்சி, கிரிக்கெட் வளர்ச்சி அவரால் சேதமடைந்தது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x