Published : 29 Jul 2017 10:20 AM
Last Updated : 29 Jul 2017 10:20 AM

பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியல்: 5-வது இடத்தில் பி.வி.சிந்து

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 5-வது இடத்தில் தொடர்கிறார்.

உலகின் சிறந்த வீரர்களுக்கான பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பெண்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து தொடர்ந்து 5-வது இடத்தில் நீடிக்கிறார். அதே நேரத்தில் மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெவால், 16-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பெண்களுக்கான பிரிவில் முதல் 25 இடங்களில் இவர்கள் இருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

ஆண்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 8-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியாவில் நடந்த பாட்மிண்டன் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றதால் அவர் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான பிரணாய் 6 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் பட்டம் வென்றதால் அவர் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளார். இதே பாட்மிண்டன் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்தியாவின் காஷ்யப் 12 இடங்கள் முன்னேறி 47-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் சமீர் வர்மா 28-வது இடத்திலும், அஜய் ஜெயராம் 16-வது இடத்திலும், சாய் பிரணீத் 19-வது இடத்திலும் உள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிகி ரெட்டி இணை 20-வது இடத்தில் உள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x