Last Updated : 09 Nov, 2015 01:33 PM

 

Published : 09 Nov 2015 01:33 PM
Last Updated : 09 Nov 2015 01:33 PM

ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் நீக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவரைத் திருப்பி அழைத்தது.

சீனிவாசனுக்குப் பதிலாக தற்போதைய பிசிசிஐ தலைவர் ஷஷாங் மனோகர் ஐசிசி தலைவர் ஆகிறார்.

மும்பையில் நடைபெற்ற 86-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் மீதான சீனிவாசனின் பிடி முடிவுக்கு வந்தது.

கடந்த ஜூன் மாதம் ஐசிசி தலைவராக சீனிவாசன் பொறுப்பேற்றார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. எனவே, மீதமுள்ள பதவிக்காலத்தை ஷஷாங் மனோகர் நிறைவு செய்யவுள்ளார்.

இந்நிலையில், ஐசிசி கூட்டங்களில் ஷஷாங் மனோகர் கலந்துகொள்ள முடியவில்லையெனில், சரத் பவார் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவி மட்டுமே சீனிவாசன் வசமுள்ளது கவனிக்கத்தக்கது.

முக்கிய மாற்றங்கள்:

பிசிசிஐ நடத்தும் 86-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் மேலும் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

* அணித் தேர்வுக்குழுவிலிருந்து ராஜர் பின்னி, ரஜீந்தர் சிங் ஹான்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு, இவர்களுக்குப் பதிலாக ககன் கோடா, எம்.எஸ்.கே. பிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* பிசிசிஐ டெக்னிக்கல் கமிட்டியில் அனில் கும்ளேவுக்கு பதிலாக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

* விசாகப்பட்டிணம், ராஞ்சி, இந்தூர், புனே மற்றும் ராஜ்கோட் ஆகியவை புதிய டெஸ்ட் மைதானங்கள்.

* ஐபிஎல் நிர்வாகக் குழுவிலிருந்து ரவி சாஸ்திரி நீக்கப்பட்டுள்ளார். தற்போது 5 உறுப்பினர்களுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x