Published : 25 Feb 2014 12:34 PM
Last Updated : 25 Feb 2014 12:34 PM

கோலி முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தரவரிசையில் அவரது அதிகபட்ச முன்னேற்றம் இது. மற்றொரு இந்திய பேட்ஸ்மேன் புஜாரா தொடர்ந்து 7-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தென்னாப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வின் ஓரிடம் முன்னேறி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x