Published : 10 Jun 2016 02:49 PM
Last Updated : 10 Jun 2016 02:49 PM

2016-17-ல் இந்தியாவில் 13 டெஸ்ட், 8 ஒருநாள், 3 டி20 போட்டிகள்: பிசிசிஐ அறிவிப்பு

2016-17-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த சீசனில் இந்திய அணி 13 டெஸ்ட், 8 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

மேலும் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய மைதானங்களாக ராஜ்கோட், விசாகப்பட்டினம், புனே, தரம்சலா, ராஞ்சி மற்றும் இந்தூர் ஆகியவற்றையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த நெருக்கமான சீசனில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தியாவில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கின்றன.

2000-ம் ஆண்டுக்குப் பிறகு வங்கதேசம் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

முதலில் நியூஸிலாந்து அணி செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 30-ம் தேதி வரை இந்தியாவுக்கு எதிராக இங்கு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இங்கிலாந்து இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு நவம்பர்-ஜனவரி இடையேவந்து 5 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி-மார்ச்சில் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது, ஆனால் இதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

நியூஸிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் இந்தூர், கான்பூர், கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள், தரம்சலா, டெல்லி, மொஹாலி, ராஞ்சி, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் மொஹாலி, ராஜ்கோட், மும்பை, விசாகப்பட்டிணம், சென்னை ஆகிய இடங்களிலும் ஒருநாள் போட்டிகள் புனே, கட்டாக், கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் டி20 போட்டிகள் பெங்களூரு, நாக்பூர், மற்றும் கான்பூரில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் பெங்களூரு, தரம்சலா, ராஞ்சி, புனே ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x