Published : 21 Jan 2014 11:16 AM
Last Updated : 21 Jan 2014 11:16 AM

ஆஸ்திரேலிய அணியில் ஜார்ஜ் பெய்லி நீக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஜார்ஜ் பெய்லி நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற பெய்லியும் முக்கியக் காரணமாக இருந்தார். இந்த சூழ்நிலையில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது மிகவும் கடினமான முடிவு என்று ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளர் ஜான் இன்வெரரைட்டி கூறியுள்ளார்.

அலெக்ஸ் டோலான், ஷான் மார்ஷ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காக பெய்லி நீக்கப்பட்டுள்ளார்.தென்னாப்பிரிக்க மண்ணில் அந்நாட்டுக்கு எதிராக இந்த இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு நம்பிக்கைவைத்துள்ளது.

அதே நேரத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரின் கேப்டனாக ஜார்ஜ் பெய்லி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி பிப்ரவரியில் தென்னாப்பிரிக்கா சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா செல்லும் ஆஸ்திரேலிய அணி விவரம்: கிளார்க் (கேப்டன்), ஹேடின் (துணை கேப்டன்), வார்னர், வாட்சன், ரோஜர்ஸ், ஸ்மித், ஷான் மார்ஷ், ஜாக்சன் பேர்டு , அலெக்ஸ் டோலான், ஃபாக்னர், ஹாரிஸ், ஜான்சன், லயன், பேட்டின்சன், பீட்டர் சிடில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x