Last Updated : 11 Jun, 2016 01:36 PM

 

Published : 11 Jun 2016 01:36 PM
Last Updated : 11 Jun 2016 01:36 PM

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இறுதிச் சுற்றில் சாய்னா நெவால்

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் தொடர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் உலகின் நம்பர் 2 வீராங்கனையான இஹான் வாங் என்பவரை 21-8, 21-12 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

இறுதிப் போட்டியில் சீனாவின் யூ சுன் என்பவரை இறுதிப்போட்டியில் நாளை (ஞாயிறு) சந்திக்கிறார் சாய்னா.

2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் செட்டில் அருமையான சில ஷாட்களை ஆடிய சாய்னா 15-6 என்று முன்னிலை பெற்றார். பிறகும் தனது ஸ்லைஸ், பவர் ஷாட்களை சரியாக செலுத்தி முதல் செட்டை 21-8 என்று கைப்பற்றினார் சாய்னா.

2-வது செட்டிலும் இஹானை சாய்னா எழுச்சியுற அனுமதிக்கவில்லை, அவரது நகர்வுகளும் மந்தமாக அமைய 11-4 என்று முன்னிலை பெற்றார் சாய்னா. தொடர்ந்து தாக்குதல் ஆட்டம் ஆடி 21-12 என்று 2-வது செட்டைக் கைப்பற்றி இறுதிக்குத் தகுதி பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x