Last Updated : 05 May, 2017 04:39 PM

 

Published : 05 May 2017 04:39 PM
Last Updated : 05 May 2017 04:39 PM

சாம்பியன்ஸ் டிராபிக்கு கம்பீரை அணியில் தேர்வு செய்ய கங்குலி பரிந்துரை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு கவுதம் கம்பீரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது:

இந்திய அணியில் கம்பீர் இடம்பெறத் தகுதியானவரே. அவர் மிக அருமையான பார்மில் உள்ளார்.

குறிப்பாக கே.எல்.ராகுல் காயத்திற்குப் பிறகு இன்னமும் குணமடையவில்லை என்பதால் கம்பீரை அணிக்குக் கொண்டு வர இதுவே சரியான தருணம். எனவே அணித்தேர்வாளர்கள் இது பற்றி முடிவெடுக்க சரியான தருணம் வாய்த்துள்ளது.

இவ்வாறு கூறினார் கங்குலி.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 11 ஆட்டங்களில் 411 ரன்களை 51.37 என்ற சராசரியில் கம்பீர் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 134.75. டேவிட் வார்னருக்கு பிறகு அதிக ரன்கள் எடுத்தோர் பட்டியலில் கம்பீர் உள்ளார்.

ஆனால் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஆகியோரும் சிறப்பாக ஆடிவருவதால் கம்பீருக்கு இவர்களிடமிருந்து சரியான போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களும் வரிசையில் இருப்பதால் கம்பீரை தேர்வு செய்வது கடினமே என்று கிரிக்கெட் வட்டார நிபுணர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x