Published : 17 Nov 2013 12:42 PM
Last Updated : 17 Nov 2013 12:42 PM

ட்விட்டரில் பாராட்டு மழையில் நனைந்த சச்சின்!

உலக கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடை பெற்ற மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு பாராட்டு குவிந்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி டென்னிஸ் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ட்விட்டர் மூலம் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ரோஜர் ஃபெடரர் - டென்னிஸ் வீரர்: சச்சினுக்கு என்னவொரு சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கை. தொடர்ந்து முன்னேற்றம் காண வாழ்த்துகள். நன்றி சச்சின்.

கிரீம் ஸ்வான்கி - கிரிக்கெட் வீரர்: என்னுடைய இந்த செய்தி சச்சினின் செவியை வந்தடையுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இன்று சச்சின் ஓய்வு பெற்றார். அவர் என்னவொரு அற்புதமான வீரர், மனிதர்.

கிறிஸ் கெயில் - கிரிக்கெட் வீரர்: சச்சினின் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் நானும் ஒருவராக இருந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர்: சச்சினின் உரையைப் போன்றே அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையும் நீளமானது. அதன் ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது. சச்சினிடம் இருந்து வந்த உருக்கமான வார்த்தைகள் இந்தத் தொடரை உணர்ச்சிவசமிக்கதாக முடித்துள்ளது.

பிரெட் லீ - முன்னாள் கிரிக்கெட் வீரர்: எல்லா சாதனைகளையும் படைத்துவிட்ட ஜாம்பவான் சச்சினே! வாழ்த்துகள். உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை மிகச்சிறப்பானது.

சானியா மிர்சா - டென்னிஸ் வீராங்கனை: சச்சினின் ஓய்வு ஒட்டுமொத்த இந்தியாவுக்கே உணர்ச்சிபூர்வமான தருணம். இனி உங்களின் ஆட்டத்தைக் காணும் வாய்ப்பை நாங்கள் இழக்கிறோம்.

மைக்கேல் வாகன், முன்னாள் கிரிக்கெட் வீரர்: என்னவொரு உரை. சச்சின் கடவுளே நன்றி.

ஆல்விரோ பீட்டர்சன் - கிரிக்கெட் வீரர்: கிரிக்கெட் மேதை விடை பெற்றுவிட்டார். அவருக்கு எதிராக விளையாடியதை கவுரவமாகக் கருதுகிறேன்.

மேத்யூ ஹேடன் - முன்னாள் கிரிக்கெட் வீரர்: சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கை மிக பிரமாண்டமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. குட்பை, குட்லக்.

ஹர்பஜன் சிங் - கிரிக்கெட் வீரர்: மாஸ்டருக்கு மரியாதை செலுத்துகிறேன். நீங்கள் இல்லாத கிரிக்கெட், கிரிக்கெட்டாக இருக்காது. என்னைப் பொறுத்தவரை நீங்கள்தான் கிரிக்கெட். நன்றி.

சேவாக் - கிரிக்கெட் வீரர்: சச்சின் ஓய்வு முடிவு வெளியானது முதலே உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் என்னை எப்படி பார்த்துக்கொண்டார் என்பதை சொல்ல முடியாது.

இர்ஃபான் பதான் - கிரிக்கெட் வீரர்: உலக கிரிக்கெட்டுக்கு உணர்ச்சிபூர்வமான ஓய்வு. சச்சின் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றாலும், நம்முடைய இதயங்களில் இருந்து ஓய்வு பெறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x