Published : 24 Jan 2014 11:51 AM
Last Updated : 24 Jan 2014 11:51 AM

பாட்மிண்டன் தரவரிசை: சாய்னா சறுக்கல்

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முன்னதாக 8-வது இடத்தில் இருந்த அவர் தற்போது ஓர் இடத்தை இழந்துள்ளார்.

அவ்வப்போது ஃபார்மை இழந்து தடுமாறி வரும் சாய்னா, கடந்த வாரம் நடைபெற்ற மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் 2-வது சுற்றோடு வெளியேறினார். அது அவருடைய தரவரிசையில் இப்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சீசனில் ஒரு பட்டம்கூட வெல்லாத சாய்னா, இப்போது தனது 8-வது இடத்தை ஜெர்மனியின் ஜூலியானே ஷெங்கிடம் இழந்துள்ளார். தற்போது இந்திய கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் விளையாடி வரும் சாய்னா, இதில் பட்டம் வெல்லும் பட்சத்தில் தரவரிசையில் மீண்டும் முன்னேற்றம் காணுவார்.

அதேநேரத்தில் மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 11-வது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார். அவர், மலேசிய ஓபனில் 2-வது சுற்றோடு வெளியேறினாலும், அவருடைய தரவரிசையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆடவர் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் காஷ்யப் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டு 18-வது இடத்தைப் பிடித்தார். இதேபோல் மும்பை வீரர் அஜய் ஜெயராம் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 21-வது இடத்தைப் பிடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x