Published : 21 Sep 2016 03:14 PM
Last Updated : 21 Sep 2016 03:14 PM

இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுத் தலைவராக எம்.எஸ்.கே.பிரசாத் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

41 வயதான இவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர். இந்திய அணியில் 1998 முதல் 2000 வரை விக்கெட் கீப்பராக 6 டெஸ்டுகள், 17 ஒருநாள் போட்டி களில் விளையாடியுள்ளார்.

தேர்வுக்குழுவில் தேவங் காந்தி, ககன் கோடா, சரண்தீப் சிங், ஜதின்பரன்ஜிப் ஆகியோ ரும் இடம் பெற்றுள்ளார்கள்.

இதற்கிடையே புதிய தேர்வுக் குழு நியமித்ததில் லோதா குழுவின் பரிந்துரைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. லோதாகுழு பரிந்துரையில் தேர்வுக்குழுவானது வலுவான 3 பேரை கொண்டு இயங்க வேண்டும், அவர்கள் அனை வருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ககன் கோடா, ஜதின் பரன்ஜிப் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிதில்லை. 45 வயதான தேவங் காந்தி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். சரண்தீப் 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளிலும், ஜிதின் 4 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே கள மிறங்கியுள்ளனர். ஒட்டுமொத் தமாக தேர்வுக்குழுவில் இடம் பெற்றவர்களின் அனுபவம் 13 டெஸ்ட், 31 ஒருநாள் போட்டிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x