Published : 28 Aug 2016 11:29 AM
Last Updated : 28 Aug 2016 11:29 AM

டிஎன்பிஎல் தொடர்: மதுரையை வீழ்த்தியது திண்டுக்கல்

டிஎன்பிஎல் தொடரில் மதுரை அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டிஎன்பிஎல் தொடரின் 4-வது நாளான நேற்று நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட் செய்தது.

மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் 18 ஓவர்களாக குறைக் கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் திண்டுக்கல் அணி 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் ஜெகதீசன் 50 பந்துகளில், 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் விளாசினார். கேப்டன் சுப்பிரமணிய சிவா, ஷன்னி குமார் சிங் தலா 19 ரன்களும், தர் ராஜூ 12 ரன்களும் சேர்த்தனர்.

மதுரை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் முருகானந்தம் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து உள்ளூர் அளவிலான கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் விஜேடி விதிப்படி 18 ஓவர்களில் 146 ரன்கள் எடுக்க வேண்டும் என மதுரை அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி பேட் செய்த மதுரை அணியால் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக தியாகராஜன் 37 ரன்கள் எடுத்தார். குமார் 21, பிரான்சிஸ் ரோகின்ஸ் 20, அருண் கார்த்திக் 18, விக்னேஷ் 10, லட்சுமி நாராயணன் விக்னேஷ் 11, சந்திரன் 6, அஸ்வின் குமார் 5 ரன்கள் சேர்த்தனர்.

விஜேடி விதிமுறைப்படி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த அணி தரப்பில் குருகேதர் நாத், சஞ்ஜெய் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இந்த வெற்றியால் திண்டுக்கல் அணி இரு புள்ளிகளை பெற்றது.

இன்றைய ஆட்டம்

டிஎன்பிஎல் தொடரில் 5-வது நாளான இன்று காரைக்குடி காளை- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.

காரைக்குடி காளை தனது முதல் ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியுடன் தோல்வி கண்டிருந்தது. அந்த ஆட்டத்தில் 165 ரன்களை குவித்த போதும் காரைக்குடி அணிக்கு வெற்றி வசப்படாமல் போனது.

இந்த ஆட்டத்தில் காரைக்குடி அணியின் சீனிவாசன் அரை சதமும், விஜயகுமார் 43 ரன்களும் எடுத்தனர். இவர்கள் இன்றும் சிறப்பான ஆட்டத்தை வழங்கக் கூடும். பத்ரிநாத், அனிரூதா, ராஜ்குமார் ஆகியோரும் கைகொடுத்தால் முதல் வெற்றியை பதிவு செய்யலாம்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி அணியிடம் 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது. இந்த ஆட்டத்தில் அந்த அணியின் முன்னணி வீரரான தலைவன் சற்குணம் 29 ரன் மட்டுமே எடுத்தார். 9-வது ஓவரில் அவர் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக பெவிலியனுக்கு நடையை கட்டிய தால் தோல்வியை தவிர்க்க முடி யாமல் போனது. இதனால் இன் றைய ஆட்டத்தில் சேப்பாக் அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x