Last Updated : 18 Aug, 2016 02:33 PM

 

Published : 18 Aug 2016 02:33 PM
Last Updated : 18 Aug 2016 02:33 PM

பேசும் படங்கள்: ஒலிம்பிக்கில் சாக்‌ஷியின் சக்சஸ் தருணம்!

இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், ரியோ ஒலிம்பிக் 2016-ல் மகளிர் ஃப்ரீஸ்டைல் 58 கிலோ எடைப் பிரிவு வெண்கலப் பதக்கம் வென்றார்.

அவர் 8-5 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை வீழ்த்தினார். ஆட்டத்தின் ஆரம்பத்தில் பின் தங்கியிருந்த சாக்‌ஷி, மீண்டெழுந்து, திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்று வெண்கலம் பெற்றார்.

வெற்றியைக் கொண்டாடும் வகையில் சாக்‌ஷி, ஆனந்த கண்ணீருடன் இந்திய தேசியக் கொடியைப் போர்த்திக்கொண்டு, மைதானத்தை வலம் வந்தார். பின்னர் பயிற்சியாளர்களுடன் தனது மகிழ்வை ஒட்டுமொத்த இந்தியாவின் மகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டார். கொண்டாட்ட நிகழ்வுகளின் சிறப்பு புகைப்படத் தொகுப்பு.

படங்கள்: ராய்ட்டர்ஸ், கெட்டி இமேஜஸ், ஏஎஃப்பி, ஏபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x