Published : 20 Dec 2013 00:00 am

Updated : 06 Jun 2017 16:34 pm

 

Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Jun 2017 04:34 PM

ஐசிசி தரவரிசை: புஜாரா பின்னடைவு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன் புஜாரா 7-வது இடத்துக்குப் பின் தங்கியுள்ளார். பந்து வீச்சாளர்கள் வரிசையில் அஸ்வின் தொடர்ந்து 5-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

விராட் கோலி தொடர்ந்து 20-வது இடத்தில் உள்ளார். புஜாரா, கோலி தவிர இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் முதல் 20-வது இடத்துக்குள் இல்லை. சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா ஓரிடம் முன்னேறி 8-வது இடத்தில் உள்ளார். ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.


இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 3 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர்கள் வாட்சன், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரும் தரவரிசையில் முன்னேறியுள்ளனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ், ஹசிம் ஆம்லா ஆகியோர் தொடந்து முதலிடத்தில் உள்ளனர்.


புஜாராஐசிசி தரவரிசைடெஸ்ட் தரவரிசைபின்னடைவுஇந்திய கிரிக்கெட்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x