Last Updated : 27 Jan, 2017 05:21 PM

 

Published : 27 Jan 2017 05:21 PM
Last Updated : 27 Jan 2017 05:21 PM

கிரிக்கெட் வீரர் மொகமது ஷமியின் தந்தை காலமானார்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமியின் தந்தை தவ்சிப் அலி மாரடைப்பால் காலமானார்.

இதனையடுத்து இங்கிலாந்துடன் டி20 ஆடி வரும் இந்திய அணியுடன் இருந்த மொகமது ஷமி அம்ரோஹா விரைந்தார்.

முழங்கால் காயத்திலிருந்து விடுபடும் சிகிச்சையில் இருந்த மொகமது ஷமி கான்பூர் டி20 போட்டியின் போது இந்திய அணியுடன் இருந்தார்.

இந்நிலையில் ஜனவரி 5-ம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷமியின் தந்தை தவ்சிப் அலி நேற்று காலமானார். இதனையடுத்து ஷமி அம்ரோஹா விரைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x