Last Updated : 09 Jun, 2016 09:31 AM

 

Published : 09 Jun 2016 09:31 AM
Last Updated : 09 Jun 2016 09:31 AM

சென்னை, திருச்சி உட்பட 17 மாவட்டங்களில் அரசு விளையாட்டு அரங்கில் அதிநவீன உடற்பயிற்சி கூடம்: சர்வதேச தரத்தில் அமைக்க முடிவு

தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனை களின் வசதிக்காக 17 மாவட்டங்களில் சர்வதேச தரத்திலான அதிநவீன உடற் பயிற்சிக் கூடங்களை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு விளையாட்டு மைதானங்களிலும் உடற் பயிற்சிக் கூடங்கள் செயல்பட்டு வருகின் றன. இவற்றில் ஒரு சில மைதானங்களைத் தவிர, பெரும்பாலானவற்றில் நவீன உடற் பயிற்சி சாதனங்கள் இல்லை. எனவே, தற் போதைய காலத்துக்கேற்ப, நவீன முறை யில் உடற்பயிற்சியை மேற்கொள்ள முடியா மல் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரசு விளையாட்டு அரங்க வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து உடற்பயிற்சிக் கூடங்களையும் நவீனப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, திருச்சி, கடலூர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, நீலகிரி, சென்னை (நேரு விளையாட்டு அரங்கம்), விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 17 மாவட்டங்களில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்களுக்கு அதிநவீன சாதனங்கள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை தேசிய, சர்வதேசப் போட்டிகளுக்கு தயார்படுத்துவதில் முதல்வர் ஜெயலலிதா ஆர்வம் காட்டி வருகிறார். எனவே, அதற்கேற்ற உட்கட்டமைப்பு வசதிகளை அரசு விளையாட்டு மைதானங்களில் உருவாக்கி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, தற்போது 17 மாவட்டங்களில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், சர்வதேச தரத்தில் நவீனமயமாக்கப்பட உள்ளன.

இவற்றில், ட்ரெட்மில், எல்லிப்டிகல், ரெகும்பென்ட் பைக், மல்டி பிரஸ், மல்டி பெஞ்ச், ஸ்ட்ரெச் மெஷின், ஒலிம்பிக் வெயிட்லிப்டிங் சேலஞ்ச் ரிவால்விங் செட் உள்ளிட்ட 25 வகையான அதிநவீன சாதனங்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இப்பணிகளை 3 மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x