Published : 20 Jul 2016 07:14 PM
Last Updated : 20 Jul 2016 07:14 PM

அக்டோபர் 2002 முதல் இந்தியாவை டெஸ்ட்டில் வீழ்த்தாத மே.இ.தீவுகள்: சில புள்ளி விவரங்கள்

இந்தியா-மே.இ.தீவுகள் டெஸ்ட் போட்டி நாளை ஆண்டிகுவாவில் தொடங்குகிறது. மேற்கிந்திய அணிஅக்டோபர் 2002 முதல் இந்தியாவை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரை முன்னிட்டு சில புள்ளி விவரங்கள்:

2002-ம் ஆண்டு இந்தியாவில் பயணம் மேற்கொண்டது முதல் 15 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை மே.இ.தீவுகள் வீழ்த்தியதில்லை. இந்த 15 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 8-ல் வென்றுள்ளது 7 போட்டிகள் டிரா ஆகியுள்ளது.

ஆனால் 2002-லிருந்து எடுத்துக் கொண்டால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 21 டெஸ்ட் போட்டிகள் ஆடி 1 டெஸ்டில் மே.இ.தீவுகள் வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதே காலக்கட்டத்தில் 17 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 போட்டியில் வென்றுள்ளது, அதே போல் இங்கிலாந்தை 25 போட்டிகளில் 2-ல் வீழ்த்தியுள்ளது, பாகிஸ்தானை 7 போட்டிகளில் 2-ல் வீழ்த்தியுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.

2015-முதல் மே.இ.தீவுகளின் தொடக்க விக்கெட்டுக்கான சராசரி 16.38. அதிகபட்சமாக 35 ரன்கள்தான் முதல் விக்கெட் ஜோடி எடுத்துள்ளது.

ஆசியாவுக்கு வெளியே அஸ்வினின் டெஸ்ட் பவுலிங் சராசரி 56.58. அதாவது சுமார் 57 ரன்கள் கொடுத்த பிறகுதான் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார். மாறாக ஆசியாவில் 20.47 ரன்களுக்கு ஒரு விக்கெட் வீதத்தில் வீழ்த்தியுள்ளார். ஆசியாவுக்கு வெளியே அஸ்வின் 14 இன்னிங்ஸ்களில் 4 இன்னிங்ஸ்களில் விக்கெட் எதையும் கைப்பற்றாமல் முடிந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டெல்லியில் 127 மற்றும் 100 நாட் அவுட் என்ற இன்னிங்ஸ் பின்னணியில் 3-வது தொடர் சதத்தை எதிர்நோக்குகிறார் அஜிங்கிய ரஹானே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x