Published : 27 Jan 2014 11:19 AM
Last Updated : 27 Jan 2014 11:19 AM

ஆஸி. ஓபன்: சானியா ஜோடி தோல்வி

கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா-ருமேனியாவின் ஹரியா டீக்கா ஜோடி 3-6, 2-6 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் கிறிஸ்டினா மிலாட்நோவிக்-கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியிடம் தோல்வி கண்டது.

58 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டி முழுவதும் நெஸ்டர்-கிறிஸ்டினா ஆதிக்கம் செலுத்தியது. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்துக்கு சானியா ஜோடியால் ஈடுகொடுக்க முடியவில்லை. சானியா ஜோடி குறைவான “அன்போர்ஸ்டு எரர்ஸே” செய்திருந்தபோதிலும் சர்வீஸ் மற்றுகளை ஷாட்களை சிறப்பாக கையாளவில்லை. டேனியல் நெஸ்டர் ஜோடி தங்களுக்கு கிடைத்த 5 பிரேக் பாயிண்ட்களை சரியாகப் பயன்படுத்தி சானியா ஜோடியின் சர்வீஸை தகர்த்தது.

நெஸ்டர்-கிறிஸ்டினா ஜோடி கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியிலும் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது. அந்தப் போட்டியில் நெஸ்டர் ஜோடி, தங்களின் காலிறுதியில் இந்தியாவின் சானியா-டீக்கா ஜோடியைத் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x