Last Updated : 22 Feb, 2017 10:34 AM

 

Published : 22 Feb 2017 10:34 AM
Last Updated : 22 Feb 2017 10:34 AM

ஜார்க்கண்ட் அணிக்கு தோனி கேப்டன்

ஐபிஎல் தொடரில் புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து கடந்த இருதினங்களுக்கு முன் தோனி நீக்கப்பட்டார். இந்நிலையில் உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி தொடரில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய் ஹசாரே தொடர் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னர் இந்த தொடரில் தோனி விளையாடிபோது கூட அவர் கேப்டனாக இல்லாமல் சாதாரண வீரராக அணியில் இடம் பெற்றிருந்தார்.

தோனியுடன் அணியில் அதிரடி வீரரான இஷான் கிஷன், சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஷ் நதீம், அனுபவ வீரரான சவுரப் திவாரி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள இஷாங்க் ஜக்கி, வருண் ஆரோன் மற்றும் இளம் அதிரடி வீரரான விராட் சிங்கும் அணியில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x