Last Updated : 19 Aug, 2016 06:26 PM

 

Published : 19 Aug 2016 06:26 PM
Last Updated : 19 Aug 2016 06:26 PM

அமெரிக்க நீச்சல் வீரர்களின் கொள்ளை நாடகம் அம்பலம்: பிரேசில் மக்களிடம் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி மன்னிப்பு

ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்க நீச்சல் வீரர்கள் 3 பேர் தாங்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறியது நாடகம் என்று அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து பிரேசிலுக்கு களங்கம் விளைவிக்கும் இத்தகைய குற்றச்சாட்டு தவறு என்று நிரூபிக்கப்பட்டதால் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி பிரேசிலிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

உண்மையில் விசாரணையில் தெரிய வந்தது என்னவெனில் அமெரிக்க நீச்சல் வீரர்களில் 4 பேர் குடிபோதையில் எரிவாயு நிலையத்தில் நுழைந்து சூறையாடியுள்ளனர். இதனையடுத்து இவர்களை பிடித்து வைத்த பெட்ரோல் பங்க் பாதுகாவலர்கள் சேதாரத்திற்கு பணம் செலுத்திவிட்டு இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் பணத்தைக் கட்டிவிட்டு விடுபட்ட வந்த வீரர்கள் தங்களை துப்பாக்கி முனையில் வழிப்பறி கொள்ளை செய்ததாக அபாண்டக் குற்றம்சாட்டினர்.

இந்தக் குற்றச்சாட்டை அடுத்து பிரேசில் போலீசார் தீவிர விசாரணை நடத்த அமெரிக்க நீச்சல் வீரர்களின் நாடகம் தெரியவந்தது. அதாவது பெட்ரோல் நிலையத்தின் பாத்ரூமை இவர்கள் சூறையாடியது பாதுகாப்பு அமைப்பினரின் வீடியோவில் பதிவானது போலீஸால் ஆராயப்பட அதில், செய்த தவறுக்கு ஈடுகட்டுமாறு வலியுறுத்தியே பெட்ரோல் நிலைய காவலர்கள் இவர்களை பிடித்து வைத்ததும் பணத்தைக் கட்டிவிட்டு இவர்கள் வெளியேறியதும் தெரியவந்தது.

இரண்டு நீச்சல் வீரர்கள் குன்னர் பெண்ட்ஸ், ஜாக் காங்கர் ஆகியோர் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தங்கள் அமெரிக்க விமானத்தைப் பிடித்தனர். மூன்றாம் நீச்சல் வீரர் அபராதம் கட்டவைக்கப்பட்டார். அதாவது இவர் 10,800 டாலர்கள் அபராதம் செலுத்திவிட்டு பிரேசிலை விட்டு அமெரிக்கா புறப்படுவார்.

இந்த சம்பவம் ரியோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x