Last Updated : 12 Mar, 2017 12:04 PM

 

Published : 12 Mar 2017 12:04 PM
Last Updated : 12 Mar 2017 12:04 PM

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டி: சாய்னா, சிந்து அதிர்ச்சி தோல்வி

இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் கால் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தனர்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் தரவரிசையில் 8-வது இடத்தில் சாய்னா, 3-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் சங் ஜி ஹியுனை எதிர்த்து விளையாடினார். இதில் 20-22, 20-22 என்ற நேர் செட்டில் சாய்னா தோல்வியடைந்தார்.

முதல் செட்டில் சாய்னா 17-12 என்ற கணக்கிலும், 2-வது செட்டில் 9-6 என்ற கணக்கிலும் முன்னிலையில் இருந்த போதும் 54 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், அவர் வெற்றி பெற தவறினார்.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும் தரவரிசை யில் 6-வது இடத்தில் உள்ளவரு மான பி.வி.சிந்து, முதல் நிலை வீராங்கனையான சீன தைபேவை சேர்ந்த டாய் சூ யிங்குடன் மோதினார். இதில் சிந்து 14-21, 10-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.

26 வயதான சிந்து இதற்கு முன்னர் டாய் சூ யிங்குடன் மோதிய 7 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இந்த சாதனைகள் எந்த வகையிலும் அவருக்கு உதவாமல் போனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x